அதிமுகவை சீண்டும் அண்ணாமலை!!
பாஜக கூட்டணி தேவையா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக வெறுப்பாக எழுந்துள்ளது.
சமீபத்தில் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை வெளியிட்டு ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என பேசினார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை பேசியுள்ளார்.
ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன் என்ற அண்ணாமலை அதிமுகவையும் மறைமுகமாக சீண்டியுள்ளார். ஒரு கருத்தை எதிர்க்கிறோம் என்றால் அதன் அடிப்படையை எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை என்று பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசப்போவதாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.
உங்களை எதிர்க்க கூடாது என்றால் டெல்லி போய் பாஜக தலைமையை பார்த்துவிட்டு வாருங்கள். அண்ணாமலை இருக்கும் வரை அனைவரது ஊழல் பற்றியும் பேசுவேன் என்று சூசகமாக எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.
அதிமுக குறித்து ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் பேச்சிற்கு, எடப்பாடி பழனிசாமியின் எதிர்வினையானது அண்ணாமலை பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்பது மட்டுமே.
தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி குறித்தும்,ஊழல் குறித்தும் பேசும் அண்ணாமலையின் வெறுப்பு பேச்சுகளை சகித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது அவசியம்தானா என்பதை இபிஎஸ் யோசிக்க வேண்டும்.
என்ன நோக்கத்திற்காக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது என்பது குறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது இடதுகையாக செயல்படும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இன்னும் பிற முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறித்தான வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து வருகின்றனர் என்பது அப்பட்டமான உண்மை.கட்சியில் தனிமனித காரணங்களுக்காக அதிமுக இயக்கத்தை பயன்படுத்தி வருகின்றது இபிஎஸ் தலைமை.
தமிழகத்தில் அதிமுகவிற்கு 50 ஆண்டுகால வரலாறு உண்டு.தேசிய கட்சியான பாஜகவுக்கு தான் தமிழகத்தில் உள்நுழைய மாநில கட்சியின்ஆதரவு தேவைப்படுகிறது.அதிமுகவிற்கு எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லை.தற்போது கூட்டணியால்
பாஜக அதிமுகவை பயன்படுத்தி கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை பெற்று வருகின்றது.அதிமுகவுக்கு உடைய பாரம்பரிய வாக்கு வங்கி தற்போது பாஜகவுக்கு மாறிக்கொண்டு வருகின்றது.மற்றொன்று பாஜக கூட்டணியால் அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர்,முஸ்லிம் வாக்குவங்கி சரிய தொடங்கியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக கூட்டணியில் இருக்கிறோம் என அண்ணாமலை பேசுவதை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்கலாம்.ஆனால் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இதனை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.