
அதன்படி பார்த்தால் 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் கடன் ரூ.87,000 கோடியாக உள்ளது. இது கடந்த 2021-22ம் ஆண்டில் இருந்து அப்படியே தொடர்ந்து வருகிறது.
ஆனால் தணிக்கை செய்யப்படாத CAG புள்ளிவிபரங்களின் படி தமிழ்நாட்டின் வரி வருவாய் 2021-22ல் ரூ.1,60,324.66 கோடியிலிருந்து 2022-23ல் 18 சதவீதம் வரை அதிகரித்து ரூ.1,88,953.57 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் வருவாய்க்கான செலவு என்பதும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.