கூண்டோடு மாற்றப்பட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள்.. 4 மாவட்ட எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்.. அடுத்தடுத்து அதிரடி!


தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக ஏ.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி அங்கித் ஜெயின், தி.நகர், டெபுடி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட எஸ்.பி சிவக்குமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Share on: