தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்!

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது கூறியதாவது ,தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்.மேலும் தலைவர்கள் என்பவர்கள் சுயநலவாதிகள் ,அவர்களுக்கு தங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ,அவர்களின் குடும்பத்தின் தேவையை நிறைவேற்றி கொள்வதற்கும் ,அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் ,அவர்களின் கமிஷன் ஏஜெண்டுகளுக்கும் நிறைவேற்றிகொள்வதற்காக மட்டுமே இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் .

மேலும் உரையாடலின் பொழுது அவர்கள் அனைவரும் கட்சியை பற்றி சிறிது கூட அவர்கள் கவலை படுவதில்லை என்று கூறியுள்ளார் .அடிமட்டத்தில் மற்றும் கிளை அளவில் உள்ளவர்கள் தான் கட்சியின் தேவைகளை பற்றி நன்றாக தெரிந்து மக்கள் என்ன எதிர் பாக்கிறார்கள் ,ஒன்று பட்ட அண்ணாதிமுகவிவை எதிர்பாக்கிறார்கள் .அதனை நோக்கி பயணிக்க வேண்டும் ,அதனை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .எனவே நாம் அதனை நோக்கி பயணித்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் உரையாடும் பொழுது கூறியுள்ளார்

Share on: