
கடந்த அதிமுக ஆட்சியில் சாலை பணிகளுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது .இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கியது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார் .சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் சாலை பணிகள் மேற்கொள்ள உறவினர்கள் ,நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக அமைப்பு செயலாளர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார் .அந்த புகாரில் வேலுமணி தொடர்புடைய ஏழு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டது .மேலும் விதிகளை மீறி 20 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.
ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி அரசிடம் அறிக்கை அளித்தது .தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கூறி வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் . எனவே அவருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .மற்றவர்களுக்கு எதிரான வழக்கில் தொடர்ந்து புலன்விசாரணை மேற்கொள்ளவும் ,வேலுமணியை தொடர்புபடுத்த புதிய ஆதாரங்கள் கிடைத்தால் ,இறுதி அறிக்கையில் அவரையும் சேர்க்கலாம் எனவும் ,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது