அதிமுகவை பலவீனப் படுத்தும் பாஜக அதனால் பலனடைவது திமுகவா?பாஜகவா? தமிழ்நாட்டுக்கு வலிமையான அதிமுக தேவை!


அ.தி.மு.க.வை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் EPS OPS உள்பட அவர்களது செயல்பாடுகளை சட்டமன்றத்தில் பார்க்கும்பொழுது அனைவரும் தி.மு.க.வில் இணைந்து விடுவார்கள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து விடும் என்று பேட்டி கொடுத்த ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் கூற கூட தயாராக இல்லாத நிலையில் தி.மு.க.வின் பயணமானது ஒட்டுமொத்த திராவிடத்தின் குத்தகைதாரர் எனவும் தி.மு.க.மட்டுமே திராவிட கட்சி என்கிற தமிழ்நாட்டின் கட்டமைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு அகில இந்திய அளவிற்கு திராவிடமா இந்துத்துவமா என்கிற அளவில் கொள்கை ரீதியாக அவர்கள் கட்டமைக்கிறார்கள் .
பா.ஜ.க. தமிழ்நாட்டில் தி.மு.க.வை எதிர்ப்பதாகவும் திரு.அண்ணாமலையின் அறிக்கையின் படி அ.தி.மு.க வை அளித்து 2026இல் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்கின்ற பெயரில் தி.மு.க.வை வளர்த்து விடுகிறார்கள். தற்பொழுது இந்தியா முழுவதும் உள்ள எதிர் காட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் திரு. ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இதனை பா.ஜ.க.வின் கோணத்தில் பார்க்கும்பொழுது அ.தி.மு.க வை பலம் குன்ற பல கூறுகளாக்கும் நிலையில் பா.ஜ.க வைத் தவிர்த்து தி.மு.க.பலம் பெற்று திரு.ஸ்டாலின் அவர்கள் ஒரு தேசிய தலைவராக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே அ.தி.மு.க எந்த அளவு வலிமையாக இருக்கிறதோ பா.ஜ.க.வின் அணைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: