அதிமுக வேட்பாளர்களுக்கே கட்சி நிதி சரிவரச் சென்று சேரவில்லையா?


அ.தி.மு.க. கட்சி தொண்டர்களோடு எனது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர்கள் கூறியது , பல இடங்களில் பணத்தைப் பெற்றுக்கொண்டு சீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது , பலபேருக்குக் கட்சியிலிருந்து எந்த விதமான நிதி உதவியும் வழங்கப்படவில்லை மற்றும் தவறான தேர்தல் வியூகங்கள், இவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி இல்லை என்று அறிவித்த அன்று இருந்த உற்சாகம் அடுத்த 24மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்ற அறிவிப்பால் மறைந்தது.
E.P.S மற்றும் O.P.S என்ன சத்திய பிரமாணம் செய்தாலும் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் , இந்த இயக்கம் எம் .ஜி .ஆர் காலத்திலிருந்த முன்னோடிகளை முன்னிறுத்தப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும் . நகரச்செயலாளர் முதல் ஒன்றியச்செயலாளர், மாவட்டச்செயலாளர் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தலைமை வரை தொண்டர்களிடத்தில் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் இவ்வாறு செயல்படும்பொழுது தான் வலிமையான அ.தி.மு.க.உருவாகும்.
இன்னும் சம்பிரதாய நடைமுறைகளை நாம் செய்து கொண்டிருப்பின் இரட்டை இலையைப் பார்த்து வாக்களிப்பவர்கள் என்றென்றும் நம்மை ஆதரிப்பார்கள்! கண்டிப்பாக இந்த இருவரது தலைமை அகற்றப்படும்!
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: