அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்று டெல்லி ஏங்கிய காலம் எங்கே போனது?

      புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலங்களில் டெல்லியில் பிரதமர் முதல் பிற அமைச்சர்கள் வரை அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கும் என்று காத்துக்கொண்டிருப்பர். மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த காலகட்டம், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் கேட்டு பெற்று கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது.
     அப்படி ஒரு சூழலில் எம்.ஜி.ஆர். மன்மோகன்சிங் சந்திப்பு நிகழ்ந்தது. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை வளர்ச்சி திட்டங்களுக்காக புரட்சி தலைவர் மன்மோகன்சிங் அவர்களிடம் கேட்டபோது, "கடும் நிதிநெருக்கடியில் மத்திய அரசு உள்ளது. நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி தர முடியாது" என்று மன்மோகன்சிங் கூறியதை கேட்டதும் கோபத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் பிரதமர் ராஜீவகாந்தி அவர்களிடம் இருந்து மன்மோகன்சிங்கிற்கு ஒரு உத்தரவு. எம்.ஜி.ஆர். கேட்பதையெல்லாம் கொடுத்து விடுங்கள் என்று. முடியாது என்று சொன்ன மன்மோகன்சிங் ஐ பதற வைத்தார் புரட்சி தலைவர். 
    அம்மா அவர்களின் காலகட்டங்களிலும் இது போன்று மத்திய அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இப்போது இருக்கும் அதிமுகவின் தலைமை ஊழல் வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் பயந்து, எப்போதும் டெல்லியை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறது. பிரதமர் தமிழகம் வந்தால் அதிமுக தலைமையிடம் அனுமதி வாங்கி காத்திருந்து சந்தித்து சென்ற காலம் போய், பிரதமரை வரவேற்க ஒருவரும், வழியனுப்ப ஒருவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
   இவர்களா புரட்சி தலைவர் உருவாக்கிய கழகத்தின் தலைவர்கள்? இதுவா அவர் காண்பித்த வழி? இதனால் யாருக்கு பலன்? EPS க்கும், OPS க்கும் என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அனால் அந்த பாம்பு இவர்களை ஒரு நாள் விழுங்கி அதிமுக வையும், தமிழகத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பது இவர்களுக்கு இன்னும் புலப்படவில்லை. இவர்களின் சுய லாபத்திற்காக அதிமுக எனும் மகத்தான கழகத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை போன்று மத்திய அரசின் அடிமைகளாக இருக்கும் தலைமையை வேரறுத்து தொண்டர்களை நல்லதொரு பாதையில் அழைத்து செல்ல வேண்டுமென்றால், தொண்டர்கள் தினமும் இதனை பற்றி கவலை படுவதால் எதுவும் நடந்து விடாது. ஒன்றுபட வேண்டும். தொண்டர்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமை உருக்க வேண்டும்.
  நாளைய எதிர்காலம் தொண்டர்கள் கையில்தான் உள்ளது. அனைத்து தொண்டர்களும் தங்களுக்கான உறுப்பினர் அட்டையை பெற்று சரியான தலைமையை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் தலைமையே, புரட்சி தலைவர் வழி நடத்திய கழகத்தின் உண்மையான தலைமை. ஏதோ நான்கு பேர் சேர்ந்து கழக நிர்வாகிகள் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கும் தலைமையெல்லாம், டெல்லிக்கு தலையாட்டும் தலைமையே.    

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: