நீதிமன்ற தீர்ப்பு & தேர்தல் ஆணையத்தின் மீது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கையில்லை


தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு நம்பிக்கை என்பது அதிமுக தொண்டர்கள் இடத்தில் இல்லை . பி ஜே பி விருப்பத்திற்கு ஏற்ப தான் தேர்தல் ஆணையம் தங்கள் முடிவுகளை எடுக்கிறார்கள் .ஓ பி எஸ் பொறுத்தவரைக்கும் இந்த இரட்டை தலைமை தொடர வேண்டும் துன்று நினைத்து கொண்டிருக்கிறார் .
இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் இருவருமே சாதிய அரசியலை கையில் எடுக்கிறார்கள் . புரட்சித்தலைவர் காலத்தில் அந்த சாதிய அரசியல் கிடையாது .மற்ற சமூகத்தினர் அதிகமாக இருக்கின்ற இடங்களில் கூட ஒரு சின்ன சமுதாயத்தினர் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும் .அவர்களும் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் .சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டதுதான் அண்ணா தி.மு.க.ஆனால் இன்றைக்கு இ பி எஸ் அவர்கள் தான் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் .அதே போல ஓ பி எஸ் ,சசிகலா ,தினகரன் போன்றோர் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் . கே பி முன்னுசாமி அவர்கள் தான் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.இவர்கள் அனைவருமே ராமதாஸ் ஆக வேண்டும் என்று முயற்சிக்கிறார்களே ஒழிய இன்னொரு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழியிலே அண்ணா தி மு க என்றொரு மாபெரும் இயக்கம் தொண்டர்களால் ஒரு தலைமை உருவாக்கப்பட்டு அந்த தலைமை வழிநடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவில் இவர்கள் இல்லை .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: