என்ன காரணங்களை முன்வைத்து மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பார்கள்?


மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க வலிமையாக இருக்கிறது அதில் மாற்றுக்கருத்து இல்லை. என்னதான் ஆளும்கட்சியாக தி.மு.க இருந்தாலும் கூட, என்னதான் பணபலம் பிரயோகிக்கப்பட்டாலும் கூட, அ.தி.மு.கவின் வெற்றி வாய்ப்புகள் மேற்கு மாவட்டங்களில் அதிகமாகத் தான் இருக்கிறது.
ஆனால் அதில் இரண்டு விசயங்கள் சரிவை ஏற்படுத்துகின்றன. ஒன்று நேற்று(தேதி) வேலுமணி செய்த தவறான செயல்கள் சரிவைக் கொடுத்திருக்கிறது மற்றொன்று இப்பொழுது நாம் உள்ளூரில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசவேண்டும் குறிப்பாகக் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பாலம் கட்டும் பனி பத்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.சுமார் மூன்று மாதங்களில் முடிவடையவேண்டிய பனி பத்து மாதங்கள் ஆகியும் முடிவடையாமல் இருக்கிறது.
யாரேனும் அதில் தவறு செய்திருந்தால் அல்லது அதில் ஊழல் நடைபெற்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது கைது செய்யுங்கள். ஆனால் அந்த பனி பாதியில் நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. அதிமுக வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்ற பகுதிகளில் திரு எடப்பாடி பழனிசாமி தேசிய அரசியல் பேசுகின்றார். திரு ஸ்டாலின் அவர்கள் தந்திரமாக உள்ளூர் பிரச்சனைகளைப் பேசாமல் தேசிய அரசியல் பா.ஜ.கவிற்கு எதிரான வாக்கு என்று கட்டமைத்தார் திரு எடப்பாடி பழனிசாமி விசயம் புரியாமல் “மேற்கு வங்கத்தில் நடந்தது போல நாங்கள் சட்டமன்றத்தை முடக்கிவிடுவோம்” “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்கின்ற அளவில் தன் பதிலையும் பதிவு செய்துவிட்டார் அது தேவையற்றது.
உள்ளூரில் அந்தந்த பகுதிகளில் என்ன என்ன பிரச்சனைகள் என்று முன்னிறுத்தினாலே அ.தி.மு.க ஒரு கணிசமான வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு மேற்கு மாவட்டங்களில் இருக்கிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: