“ஜெ. ஜெயலலிதா .. வின் ஆளுமை “

இன்று போலவே, 2014 ஆம் ஆண்டிலும் இதே மாதிரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜகவினர், தமிழகத்தில் ராஜேந்திர சோழன் முடி சூட்டிக் கொண்ட 1,000 வது தினம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆண்டு விழா ஆகியவற்றை தமிழகம் முழுவதும் கொண்டாடுவதற்கு 9.11.2014 நாளன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்து தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

அன்றைய முதல்வர் ஜெ. அவர்களின் அரசு எந்த பேரணிக்கும் அனுமதி கிடையாது என மறுத்தது.. போலீஸ் சட்டம் பிரிவு, 13 பி மற்றும் சென்னை நகர போலீஸ் சட்டம் பிரிவு, 41 ஏ ஆகியவற்றின் அடிப்படையில், போலீசார் அனுமதி மறுத்தனர். சென்னையில், அனுமதி கோரும் மனு மீது, நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில், தற்போது போலவே அன்றும் ஆர்.எஸ்.எஸ். விழாவை கொண்டாட, அனுமதி அளிக்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.. இரு தரப்பு விவாதங்களுக்கு பிறகு… உயர்நீதிமன்றம் , வெள்ளை சட்டை, காக்கி அரைக்கால் சட்டை, போலீஸ் மற்றும் ராணுவத்தின் சீருடை அல்ல என கூறியதோடு, சில கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு அனுமதி அளித்தது..

ஆனால்… ஜெ – எனும் ஆளுமை என்ன செய்தார் தெரியுமா?

உயர் நீதிமன்ற உத்தரவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.. முதலில் எடுத்த முடிவில் கடைசி வரை உறுதியாய் இருந்தார்.. பேரணி மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்ததோடு, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், தொண்டர்கள் என பெரும்பாலானவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையில் அடைத்தார் ..

அப்போது மத்தியில் மோடி ஆட்சி தான் .. தமிழக பாஜகவினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எல்லாம் போட்டார்கள் .. அதையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை..

அது தான் ஜெ. ஜெயலலிதா .. வின் ஆளுமை.

Share on: