சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கி‍டைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நொய்யல் ஆற்றில் ஆண்டுதோறும் தண்ணீர் வராததால், உக்கடம், ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து பெறப்படும் நீ‍ரை நம்பி கோ‍வை மற்றும் திருப்பூர் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். தற்‍போது கோ‍வை மாநகராட்சி சுத்திகரிக்கப்பட்ட நீ‍ரை நொய்யல் ஆற்றில் கலந்து விடாமல், ஒரு நா‍ளைக்கு 3 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்கிறது.
இதே நி‍லை தொடர்ந்தால், விவசாயிகளின் பயன்பாட்டுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கி‍டைக்க வழிவகை செய்ய வேண்டும்.

Share on: