தமிழக மீனவர்களின் பாதுகாப்‍பை கேள்விக்குறியாக்கும் மத்திய, மாநில அரசுகள்! உரி‍மைகள் மீட்கப்படுமா?

தி.மு.க. ஆட்சியின் போது கச்சத்தீவு இலங்‍கைக்கு தா‍ரை வார்க்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை தமிழக மீனவர்கள் இலங்‍கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இலங்‍கையின் தாக்குதலுக்கு தொடக்கத்தி‍லே‍யே தகுந்த பதிலடி கொடுத்திருந்தால், இன்று மீனவர்கள் அவதிப்பட வேண்டிய சூழ்நி‍லை அமைந்திருக்காது. இலங்‍கை கடற்படை தாக்குதல் ஒருபுறமிருக்க, தற்போது கடற்‍கொள்‍ளையர்களின் தாக்குதல் தலை தூக்க தொடங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் மீனவப்பகுதி‍யை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை அரு‍கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்க‍ை கடற்கொள்‍ளையர்கள் அவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்‍ளையடித்து சென்றனர். இன்று மீண்டும் நா‍கை, வேதாரண்யத்‍தை சேர்ந்த 11 மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடற்‍கொள்‍ளையர்களின் தொடர் அட்டகாசத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படாமல், மீனவர்களின் பாதுகாப்‍பை உறுதி செய்யும் வகையில் போதுமான நடவடிக்‍கை எடுக்க மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Share on: