நீட் தேர்வில் விலக்கு பெற இந்த இரண்டு வழியில் ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்!


உள்ளாட்சித் தேர்தல் நடந்துகொண்டிருக்கின்ற அந்த காலகட்டத்தில் நீட் பிரச்சனையை ஆளுநர் திரும்ப அனுப்பும் நிலையில் சற்றும் சிந்திக்காமல் சட்டமன்றத்தைக் கூட்டி அணைத்து கட்சிகளும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டது அந்த சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பாக அணைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு வங்கி அரசியலுக்குத் திராவிட கழகம் அதனைப் பயன்படுத்திக் கொண்டது. அத்தகைய சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நிறைவுற்ற பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூற தவறியதால் திரு. ஸ்டாலின் அவர்கள் விரித்த வலையில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் மாட்டிக்கொண்டனர்.அத்தகைய தினம் சட்டமன்றத்தில் ஒரு மிகப்பெரிய விவாதமாக ஆளுநரை வெற்றிகொண்டு விட்டார் திரு.ஸ்டாலின் என்கின்ற அளவில் பெரிது படுத்தப்பட்டது.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் விலக்கு பெற வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும் அல்லது திரு. மோடி அவர்களை அணுகி அவரது ஆசீர்வாதத்தோடு விலக்கு பெற வேண்டும். அரசியல் செய்வதற்கு மட்டுமே திராவிடக் கழகம் இதனைப் பயன்படுத்துகிறார்களே தவிரத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நலன் தெரிவிக்கும்
நிலையில் மாணவர்களுக்கு நீட் விலக்கு பெற்றுத்தருகிற முனைப்போடு அவர்கள் செயல்படவில்லை.
திரு.உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது நீட் விலக்கு பெற ரகசியம் தாங்கலுக்கு மட்டுமே தெரியும் ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்து போன்ற தவறான வாக்குறுதிகளைக் கூறி தமிழ்நாட்டு மாணவர்களைத் தவறாக வழிநடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: