எடப்பாடியை ஓரம் கட்டிவிட்டு , ஓ.பன்னீர்செல்வம், டிடிவி,சசிகலாவை வைத்து காய் நகர்த்துகிறதா பாஜக?

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில்  எடப்பாடி கலந்துகொள்ளவில்லை ,ஆனால் 
ஓ பி எஸ்  தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டுஇருக்கிறார் .ஆளுநர் இடையே நல்ல நட்புறவுடன் இருந்த எடப்பாடி ஏன் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஆச்சரியமாக பார்க்கப்பட்டது .ஏனென்றால் அதிமுக பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பி ஜே பி தன்னை கண்டுகொள்ளவில்லை என்று   
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வருத்தம் இருக்கிறது .சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி அங்கு மோடியையும் அமிட்ஷாவையும் சந்தித்து பேச நேரம் கேட்டுஇருக்கிறார் .ஆனால் அதற்கு நேரம் கொடுக்காத காரணத்தினால் வருத்தத்துடனேயே நாடு திரும்பியிருக்கிறார் . அதற்கு காரணம்   ஓ.பன்னீர்செல்வம், டிடிவி,சசிகலா இவர்களை இணைத்து பி ஜே பி எடப்பாடிக்கு எதிராக வியூகம் வகுப்பதை அறிந்த எடப்பாடி சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறார் .தொடர்ச்சியாக ஓபி எஸ் க்கு பி ஜே பி துணை நிற்பதும் ,எடப்பாடியின் வழக்குகள்  சூடுபிடிக்க தொடங்கியதும் தான் காரணம் என்று பார்க்கப்படுகிறது .இதற்க்கு இடையில் எடப்பாடியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ,செய்தியாளர் சந்திப்பில் பி ஜே பி தினகரன் உடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக வின் தனித்தன்மையை யாராலும் எதுவும் பண்ண முடியாது என்று சொல்லியிருக்கிறார் .அதிமுக வின் முழு கட்டமைப்பு யாரிடம் இருந்தாலும் இரட்டை இலை  சின்னம் யாரிடம் உள்ளதோ அவர்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் ,இதுதான் அனைவரும்  எதிர்பார்ப்பும் கூட .இதனை பயன்படுத்தி ஒரு புதிய யுக்தியை பி ஜே பி கையாளப்போவதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .இதனால் எடப்பாடியின் தரப்பு ஒரு தீர்க்கமான முடிவு செய்து காய் நகர்த்தப்போவதாக பேசப்படுகிறது .இதற்கு பின்  என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: