“விடியல் அரசாங்கத்தின் பத்திரபதிவு துறையில் நிகழும் முறைகேடுகள்”

விடியல் அரசாங்கம் நேற்றிலிருந்து பத்திரப் பதிவுத்துறை இணைய தளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்தை பொறுத்து யார் பெயரில் தற்போது உள்ளது எவ்வளவு அடமானம் வைத்துள்ளார்கள், யார் விற்பனை செய்துள்ளார்கள் முன் ஆவணம் (டைட்டில் டீட்) சுத்தமாக உள்ளதா என்று நாமே பரிசோதித்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து எடுத்து விட்டார்கள்.

இனி மேல் சொத்து வாங்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்று ஒரு சர்வே நெம்பருக்கு குறைந்தது 500/- ரூபாய் பணம் செலுத்தி தான் வில்லங்கம் பார்க்க வேண்டும். மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்க கூடிய அநீதியாகும்.

ஒருவருக்கு வெறும் 5 ஏக்கர் நிலம் தான் உள்ளது, ஆனால் 10 சர்வே நெம்பர்களில் 30 செண்ட் 40 செண்டாக இருந்தால் கூட இனி அவர் ஒரு அடமானப் பத்திரம் வங்கியில் வைப்பதாக இருந்தால் கூட 10 நெம்பருக்கும் வில்லங்க சான்று பெற ரூ. 5000/- செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.
அரசியல் வாதிகள் பினாமி பெயரில் வாங்கும் சொத்துக்களை பற்றிய தகவல் வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவும், அதாவது சர்வே நெம்பரை உள்ளிட்டால் யார் என்ன சொத்து வாங்கியிருக்கிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்து விடும் என்பதற்காக 2017லிருந்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக இணையத்தில் வெளி வந்த விவரங்களை பூட்டி வைக்கிறார்கள்
ஏன் என்றால் யார் வேண்டுமானாலும் ஆன்ட்ராய்டு போன் அல்லது கணிணியில் வில்லங்க சான்று பார்த்து அதை ஸ்கீரின்ஷாட் எடுத்து உடனே சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்தி விடுகிறார்கள்

பத்திரப் பதிவு நடைமுறைகளை மேனுவலாக இருப்பதை மாற்றி கணிணி மயம் மாற்றிய தினத்திலிருந்து வில்லங்க சான்றினை இணையத்தில் நாமே பரிசோதித்து கொள்ள இயலும் என்பதை திடீரென நேற்று நீக்க வேண்டிய அவசியம் என்ன?

சமூகப் போராளிகள் இதற்கு எல்லாம் பொங்க மாட்டார்கள், நவ துவாரத்தையும் அடைத்துக் கொள்வார்கள். முன்களப்பணியாளர்களும் இதற்கு எல்லாம் பொங்க மாட்டார்கள்.

Share on: