இன்றோடு இந்த திமுக அமைச்சரவை பதவியேற்று மூன்றாண்டு காலம் ஆகிறது முதல்வர் காணொளி வாயிலாக தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உண்மையாகவே மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறார்களா?
மூன்றாண்டு கால #திமுக ஆட்சியின் சாதனைகள்:
* மகளிருக்கு ஆயிரம் உதவித்தொகை, (அதுவும் வாக்குறுதி அளித்தபடி அனைவருக்கும் வழங்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கியது எல்லோரையும் பயனாளிகள் ஆக்கவில்லை.)
* மகளிருக்கு இலவச பேருந்து பயணம், (திட்டம் துவங்கிய பொழுது நன்றாக இருந்தது ஆனால் தற்பொழுது பேருந்துகளின் எண்ணிக்கையும், பயணத்திற்கான சுற்றும்(Trips) குறைக்கப்பட்டுள்ளது மேலும் பேருந்துகளின் தரம் மிக மோசமாக உள்ளது.)
* இரண்டு லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள், (இது செந்தில் பாலாஜியால் விழா நடத்தி அறிவிக்கப்பட்டது ஆனால் அது அறிவிப்பு அளவிலேயே உள்ளது. உண்மையான பயனாளிகளின் எண்ணிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.)
அதிமுக ஆட்சியில் இருந்த தற்போது கைவிடப்பட்ட சிறப்பான திட்டங்கள்:
* தாலிக்கு தங்கம் திட்டம்.
* தொட்டில் குழந்தை திட்டம்.
* பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்.
* அம்மா உணவகம்.
* அம்மா மினி கிளினிக்.
* குடிமராமத்து திட்டம்.
* விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம்.
மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் வேதனைகள்:
* மின்சார கட்டண உயர்வு.
* வீட்டு வரி உயர்வு.
* தண்ணீர் வரி உயர்வு.
* சொத்து வரி உயர்வு.
* பத்திர பதிவு கட்டணம் உயர்வு.
* தொழில் வரி உயர்வு.
* போக்குவரத்து அபராத தொகை உயர்வு (100 ரூபாய் இருந்த ஹெல்மெட் அபராதம் திமுக ஆட்சியில் 1000 கந்துவட்டியை மிஞ்சியது).
* அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு.
* பால் விலை உயர்வு
* கட்டுமான பொருட்களின் விலை உயர்வு
* சாலை வரி உயர்வு
* தமிழகமெங்கும் டாஸ்மாக் பார்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறது. அதுபோக பட்டிதொட்டியெங்கும் குடிசை தொழிலை போல மது விற்பனை நடந்துகொண்டுள்ளது.
* கஞ்சா, குட்கா, அபின், Cool Lip போன்ற போதை வஸ்துக்கள் பள்ளி மாணவர்கள் வரை பரவியுள்ளது.
* கடந்த மூன்று ஆண்டுகளில் பத்திரிக்கை செய்திகளை புரட்டினால் தவறாமல் கொலைகள், கொள்ளைகள், போதை பொருட்கள் நடமாட்டம், வன்முறை போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன இதில் பல இடங்களில் திமுகவினரே கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். எனவே சட்டம் ஒழுங்கு என்பது இந்த ஆட்சியில் தான் மோசமாக உள்ளது.
கலைஞர் காலத்தில் குறைந்தபட்சம் திமுக கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் ஆனால் இன்றைக்கு திமுக கட்சிக்காரர்களே இந்த அரசு மீது சலிப்படைந்து இருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு அனுகூலமாக இருப்பது அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் தன் வலிமை இழந்து எடப்பாடி பழனிசாமி என்கிற சுயநலமிக்கவர் கட்டுப்பாட்டில் இருப்பது தான். “எங்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டாம். உங்கள் ஊழலை பற்றி நாங்கள் பேச மாட்டோம்” என்று இருவருக்குள்ளான மறைமுக ஒப்பந்தம் மற்றும் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளால் தான் இந்த அரசாங்கத்தின் அதிருப்திகள் பெரிய அளவில் பேசப்படவில்லை.
ஒன்றுபட்ட அதிமுக வலிமையான தலைமையின் கீழ் உருவாகிற பொழுது இந்த ஆட்சியை தமிழக மக்கள் தொடர அனுமதிக்க மாட்டார்கள்.