அண்ணா திமுக பிளவுபடுமோ என்கிற அச்சம் அனைத்து அண்ணாதிமுக தொண்டர்களிடத்தில் உள்ளது !!

அண்ணா திமுக பிளவுபடுமோ என்கிற அச்சம் அனைத்து அண்ணாதிமுக தொண்டர்களிடத்தில் உள்ளது .ஆனால் அதே சமயத்தில் ஒற்றை தலைமை தேவை ,அது தொண்டர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும், பொதுக்குழுவால்  தேர்நதெடுக்கப்படக்கூடாது , என்கிற ஒரு ஆர்வம் அனைத்து அண்ணாதிமுக தொண்டர்களிடத்தில் உள்ளது .நீதிமன்ற போராட்டத்தால்  உருவாக்க முடியுமா ?அல்லது தொண்டர்களே உருவாக்க முடியுமா ?நீதிமன்ற போராட்டத்தில் ஒரு கால தாமதம் ஏற்படும் .ஒவ்வொரு நீதிபதியும் ஒவ்வொரு விதமான கருத்துகளை முன்வைத்து நடத்துகின்றனர் .அதனால் பொதுக்குழுவால்  தேர்ந்தெடுக்கப்படும் தலைமை கால தாமதம் ஏற்படுகிறது .தொண்டர்களில்  சிலர் சசிகலா வரவேண்டும் என்றும் ,ஒரு சிலர் ஓ பி எஸ் வர வேண்டும் என்றும் ,மற்றவர்கள் இ பி எஸ் வரவேண்டும் என்றும் நினைத்து கொண்டுஇருக்கின்றனர் .ஆனால் திடீரென்று ஒரு குழு சாரார் சேர்ந்து சி.வி.ஷண்முகம் பெயரை எடுத்துரைக்கின்றனர் .எனவே இவையனைத்திற்கும் தீர்வு  என்பது ஒட்டுமொத்த அண்ணா திமுக தொண்டர்களும் ஒன்றிணைந்து ,ஒரு கோடி தொண்டர்களை இணைத்து ,நாங்கள் இந்த இயக்கத்திற்கான தலைமையை அடையாளம் செய்கின்றோம் என்று தேர்தல் தொண்டர்கள் மூலமாக நடத்தப்படுகிறபொழுது ,அதில் யாரை தேர்வு செய்கிறார்களோ ,அதில் மட்டும்தான் அந்த ஒற்றை தலைமை உருவாகும் .இதை தவிர்த்து பார்த்தால் பி ஜே பி ன் பின்புலம் யாருள்ளார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் .புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அவர்கள் நம்பியதெல்லாம் அண்ணா திமுகவின் அடிப்படை தொண்டர்களை மட்டும் தான் .ஏனென்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் விலைபோகிவிடுவார்கள் அல்லது ஆட்சி அதிகாரத்திற்கு பணிந்து விடுவார்கள் .நம்முடைய இலக்கு என்பது சாதிற்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்ட பகுதிவாரியாக இல்லாமல் ஒரு கொள்கை ரீதியாக அனைத்து தொண்டர்களை ஒன்றிணைத்து ஒரு தலைமையை உருவாக்குவோம் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: