சசிகலா தலைமையில் செயல்பட தயாராகிறாரா ஓ.பி.எஸ் என்பதை தொண்டர்களுக்கு விளக்கவேண்டும்

சட்டப்பூர்வமான  நடவடிக்கைகள் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டு காலங்கள் எடுக்கும்.விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது.எடப்பாடி அவர்கள் ஒரு பேட்டியில் பொதுக்குழுவை கூட்டிக்கொள்ளுங்கள்.நாங்கள் சட்ட ஆணையரை கொடுக்கின்றோம் என்று நீதியரசர் சொல்லியிருக்கிறார்,அதனால் பொதுக்குழு தான் வலிமையானது என்று கூறினார்.அது தவறு அதாவது தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 6 மாதத்திற்கோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ இந்த கூட்டங்கள் நடக்க வேண்டும்.அதை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடை சொல்ல மாட்டார்கள்.அப்படி நடத்த வேண்டிய கட்டாயம் வந்தால் நீதிமன்றங்கள் அனுமதியளிக்குமே தவிர,பொதுக்குழுவிற்கு தான் உட்சபட்ச அதிகாரம்,நீங்கள் விதிகளை எல்லாம் திருத்தி மறுபடியும் 2000 நபர்கள் வைத்து நீங்களே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொள்ளுங்கள் என்பதும் அர்த்தம் அல்ல அதையும் எடப்பாடி அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்.பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவறாக முடிவு எடுத்து கொண்டு இருக்கிறார் திரு.எடப்பாடி. ஓபிஎஸ் அவர்கள் திருமதி சசிகலா மற்றும் தினகரன் இருவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்.ஆனால் ஒரு விளக்கம் மட்டும் திரு.ஓபிஎஸ் அவர்கள் தர வேண்டும், பொதுமக்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும்.சசிகலா அவர்கள் இன்றும் தன்னை பொதுச்செயலாளராக நினைத்துக்கொண்டு இருக்கிறார்.அப்பொழுது சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்று கொண்டு சேர வேண்டும் என்று கூறுகிறாரா அல்லது ஓபிஎஸ்ஐ தலைவராக ஏற்று கொண்டு சசிகலா அண்ணா திமுகவில் சேர வேண்டும் என்று கூறுகிறாரா தினகரன் அவர்கள் ஓபிஎஸ்ஐ நான் மன்னித்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் எனவே ஓபிஎஸ்ஐ தலைவராக ஏற்று கொண்டு தினகரன் அண்ணா திமுகவில் சேர வேண்டும் என்று கூறுகிறாரா அல்லது தினகரன்ஐ தலைவராக ஏற்றுகொண்டு
 ஓபிஎஸ் அவர்கள் அண்ணாதிமுகவில் சேர விரும்புகிறாரா,இதுதான் ஒவ்வொரு அண்ணாதிமுக தொண்டனுக்குள் எழுகின்ற கேள்வியாகும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: