அண்ணாதிமுக உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுமா ?

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துரையாடியது பின்வருமாறு ,தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கின்றது ,இதில் அண்ணாதிமுக உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுமா ?திமுக அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்குகளை அவர்கள் ,மக்களுக்கு அளித்த உறுதிகளை செய்ய தவறியதில்,மேலும் மக்களின் துன்பங்களை துயரங்களை சரிவர சட்டமன்றத்திற்கு எடுத்து சொல்லி மக்கள் மனதை வெல்வார்களா ?அல்லது உட்கட்சி சண்டையில் ஓபிஎஸ் ஐ மட்டும் வீழ்த்தினால் போதும் என்ற எண்ணம் உள்ளதா என்று சட்டமன்றத்தில் தான் தெரியும் என்று கூறியுள்ளார் .ஓபிஎஸ் ஐ பொறுத்தவரைக்கும் எல்லோரும் நினைப்பது அவர் தர்மயுத்தம் நடத்தினால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளார் .மேலும் அவர் ரகசியமாக தினகரன் ஓடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுகொண்டுள்ளார் .அப்பொழுது அவரது நம்பகத்தன்மை என்பது மிக குறைவு . அதேபோல எடப்பாடி பழனிசாமி அவர்களும் மக்களை கண்டுகொள்ளாமல் தனக்கென்று ஒரு பதவி கிடைத்தவுடன் பாதியில் சென்றுவிடுவார் .இதுவும் அவர் மீது உள்ள அதிருப்திகள் ,,எனவே அவரும் நம்பகத்தன்மை அற்றவராக தான் இருக்கிறார் .எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் சர்வாதிகாரத்தன்மையாக கட்சியை அவர் கைப்பற்றி விட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் .தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தால் அவரை ஏற்றுக்கொள்ளலாம் ,ஆனால் அவர் அப்படி செய்யவில்லை .இவர்கள் இருவருக்கும் உள்ள சண்டையில் இதே போல சட்டமன்றத்திலும் பிரதிபலித்தால் மக்கள் எப்படி அவர்களை ஏற்பார்கள் என்று சிந்திக்க வைக்க தோன்றுகிறது என்று கூறியுள்ளார் .

Share on: