‘சந்திராயன் 3 எடுத்து அனுப்பிய படம் இதுதான்’ – நக்கலாக ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ் – வலுக்கும் கண்டனம்


இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 குறித்து பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லன் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழனாக நடித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக மத்தியில் ஆளும் பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார். இந்த நிலையில் இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன் 3 வருகிற 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் விதமாக பிரகாஷ் ராஜ் தனது X (டிவிட்டர்) பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், விக்ரம் லேண்டர் மூலம் எடுக்கப்பட்டு நிலவில் இருந்து பூமிக்கு வந்த முதல் படம் என தேநீர் ஆற்றும் நபர் ஒருவரின் படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த போட்டோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ்ராஜின் இந்தப் பதிவு இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Share on: