ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எப்படி அமைகிறது என்பதை பொறுத்து தான் அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடுகள் அமையும் – கே.சி.பழனிசாமி


* எடப்பாடி பழனிசாமி நம்புவதை போல 20 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றிபெற்று விட்டால் அவரது தலைமை உறுதிசெய்யப்பட்டு விடும். அதன்பின் அதிமுக-வில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் EPS-ன் தலைமையை ஏற்றுக்கொண்டு மட்டுமே செயல்பட வேண்டும்.

* ஒருவேளை 2-5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கிறது வாக்கு சதவீதமும் 25% உட்பட்டுதான் கிடைக்கிறது என்றால், திமுக-வையும் பாஜகவையும் எதிர்த்து 2026-ல் ஆட்சி அமைக்க ஒன்றுபட்ட அதிமுக தேவை என்ற கோரிக்கை வலுப்பெறும்.

* அல்லது எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் 20% வாக்குகள் பெற்று, பாஜக கூட்டணி 15% பெற்று 5-6 இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பெற்று அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என்கிற அளவு மோசமான தோல்வி என்கிற நிலை உருவானால் மாற்று தலைமை தேவை என்கிற கோரிக்கை வலுப்பெறும்.

* 2019 நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளை பெரும். ஆனால் எத்தனை தொகுதிகளில் வெற்றி என்பது தான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடரவேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியை பெற்றுத்தந்தால் மட்டும் தான் அவர் தலைமை தொடரும்.

அதிமுகவில் மீண்டும் ஒரு புதிய அணி உருவாக போகிறது என்று பரவும் செய்தி உண்மையா?

* ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக ஒரு புதிய பரிணாமவளர்ச்சியை எட்டும். அது ஒன்றுபட்ட அதிமுக தேவை என்கிற வகையில் தான் இருக்கும்.

* சமீபத்திய ஆர்.பி.உதயகுமார் பேச்சுக்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வராது என்ற நம்பிகையில் பேசுவது போல் உள்ளது. அவர் தேர்தல் கூட்டணி அமைகிற நேரத்தில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருக்க வேண்டும்.

* OPS திமுக தலைவரை புகழ்ந்து பேசிவிட்டார் அதிமுகவின் பிரதான கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள். அப்படியென்றால் கே.பி.முனுசாமி சட்டமன்றத்தில் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனை வானளாவ புகழ்ந்தார். அப்பொழுது OPS மீது சுமத்தும் குற்றச்சாட்டு கே.பி.முனுசாமி-க்கும் பொருந்தும் அல்லவா.

* மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எனவே ஜூன் 4-க்கு பிறகு கடுமையான திமுக, பாஜக எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டும்.
Share on: