தமிழகத்தில் சாதியா?கட்சியா? என்று வரும் பொழுது திராவிட கட்சிகளில் கட்சிதான் வென்று இருக்கிறதே தவிர சாதி வென்றதாக சரித்திரம் இல்லைதிரு.கே.சி.பழனிசாமி அவர்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில் கலந்துகொண்டு நிருபரிடம் கலந்துரையாடிய பொழுது அவர் கூறியது ,தமிழ்நாட்டில் உள்ள சாதிக்கும் கட்சிக்கும் பார்க்கும் பொழுது வன்னியர் வாக்கு அன்னியர்க்கு இல்லை என்ற ராமசாமி படையாட்சி காலத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் அவர்கள் ஆரம்பித்த காலம் ,இப்பொழுது 2019-ல் கொங்கு பகுதியில் சிலிண்டர் சின்னத்தில் கொங்கு கட்சி ஆரம்பித்த காலம் ,தென்மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவர் போன்று இந்த காலகட்டங்களில் ஓர் emotional ஆக அது பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே ஒழிய ஒரு long term victory -அ கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார் .

மேலும் கலந்துரையாடலின் பொழுது கடைசியாக சாதியா ?கட்சியா ? என்று பார்க்கும் பொழுது திராவிட கட்சிகளில் கட்சி தான் வெற்றிபெற்று இருக்கிறதே தவிர சாதி வென்றதாக இதுவரை தமிழகத்தில் சரித்திரம் இல்லை என்றும் ,மேலும் சாதி தமிழகத்தில் வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளார் .
Share on: