நீ ஒரு “சார்” உடன் இருக்க வேண்டும்.. அண்ணா பல்கலை. மாணவியை மிரட்டிய ஞானசேகரன்.. யாரந்த சார்?


சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஞானசேகரன் என்ற ஆள் மட்டும் தனியாக குற்றம் செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார்.

இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்த சார் யார்… அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை போலீசார் அளித்த விளக்கத்தில், அண்ணா பல்கலையில், 2ம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் பெண் மாணவி பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். 24.12.2024 அன்று அவர் எழுத்துப்பூர்வ புகாரை அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

23.12.2024 அன்று இரவு 7.45 மணிக்கு தன் காதலனுடன் இருந்தபோது,​​அண்ணா பல்கலைக்கழக நெடுஞ்சாலை ஆய்வகத்தின் பின்புறம், இரண்டு ஆண்கள் தன் காதலனையும் தன்னையும் திடீரெனத் தாக்கியதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் பயந்து போன காதலன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த 2 பேர் அந்த மாணவியை தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியபோதும்,​​அவருடன் “வேறு வழியாக” உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புக் குழுவால் அவரது குறைகள் விசாரிக்கப்பட்ட நிலையில்.. போலீஸ் வழக்கும் பதியப்பட்டு உள்ளது.இதனால், மேற்கண்ட புகாரின் அடிப்படையில், AWPS கோட்டூர்புரத்தில் http://Cr.No.3/2024 u/s 63(a), 64(i), 75(I)(ii)(iii) என்ற முகவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக அண்ணா பல்கலை பலாத்காரத்தில் கைது செய்யப்பட்ட பிரியாணிக்கடைக்காரர் ஞானசேகரன் குறித்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகார் சம்மந்தமாக. கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 தேதி இரவு சுமார் 08.00 மணியாவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக பலாத்காரம்: அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசார செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ISவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் εδίστησεις நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Share on: