இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையில், ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்பு அவரது கையொப்பத்தோடு அனுப்பும் வேட்பாளர் பட்டியலை ஏற்க மறுக்கிறது. எங்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்க வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. . இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் எப்போது? மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது? என்று கேட்டனர். இதையடுத்து பிப்ரவரி 7ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள். பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் என்று எடப்பாடி தரப்பு குறிப்பிட்டது. இதனால் வழக்கில் வேகமாக விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்து பதில் அளித்த நீதிபதிகள், வழக்கில் திங்கள் கிழமை மனுதாக்கல் செய்யுங்கள். தேர்தலுக்கு முன்பாக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியுமா என்று பார்க்கிறோம். தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியுமா என்று பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொகுப்பினை வீடியோவடிவில் காண
https://youtu.be/2joGRwAkQ6Y