பாஜக நினைப்பது அவர்களுக்கு அடங்கி போகின்ற கைபொம்மையாக அதிமுகவில் பொதுச்செயலாளரை தக்க வைக்க வேண்டும் என்பது தான்!
திரு.கே.சி பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது கூறியதாவது ,பாஜக நினைப்பது என்னவென்றால் அவர்களுக்கு அடங்கி போகின்ற கைபொம்மையாக அண்ணாதிமுகவில் பொதுச்செயலாளரை தக்க வைக்க முயற்சி செய்கின்றனர் .அவர்கள் காலில் விழுந்து சசிகலா,தினகரன்,ops,eps அவர்களுக்கிடையே போட்டியை ஏற்படுத்தி அவர்களை தங்களுக்கு அடிமையாக மாற்ற நினைக்கிறார்கள் .
மேலும் இவர்கள் ஸ்டாலின் உடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .ஆனால் bjp நினைப்பது என்னவென்றால் இதனை வைத்து பெரும்பான்மையான இடங்களில் bjp ஐ தேர்தலில் முன்னிறுத்தி கொள்ள ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் குறிக்கோள் என்பது 20-25 சீட்டுகள் bjp கும் 15 சீட்டுகள் மட்டும் அதிமுகவிற்கு ஒதுக்கி கட்டுப்படுத்த நினைக்கிறார்கள் .
மேலும் உரையாடலின் பொழுது அதிமுகவில் உள்ள விசுவாசிகள் யாரும் ops -ஐ பார்த்தோ eps-ஐ பார்த்தோ வரவில்லை .அவர்கள் அணிஅவரும் எம்ஜிஆர் மற்றும் அம்மாவை பார்த்து தான் அண்ணாதிமுகவிற்கு வந்தனர் என்றும் ,அவர்கள் வழியே சென்று தொண்டர்களால் ஒரு தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே என்று கலந்துரையாடலில் கூறியுள்ளார் .