மதுவிலக்கு குறித்து திமுகவின் இரட்டை வேடம்!தமிழ்நாட்டில் தற்பொழுது மதுவிலக்கு இல்லாததால் ஏழை ,எளிய விவசாய பெருங்குடி மக்கள் ,தொழிலாளத் தோழர்கள் ,ஏன் ஏழை மாணவர்களும் கூட தொடர்ந்து மனம் போக்கில் மதுவை அருந்தி நூற்றுக்கணக்கில் உயிர்பலி ஆகிறார்கள் .இந்த கொடுமைக்கும் ,கொடூர பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும் ,பச்சிளம் குழந்தைகளும் பலியாகிறார்கள் என்கிற செய்தி தொடர்ந்து வந்துகொண்டிக்கின்றன .எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும் ,ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் – மு.கருணாநிதி ஜூலை 20,2015

இந்தியாவிலேயே அதிகமாக இளம் விதவைகள் இருக்க கூடிய மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது .ஏனென்றால் இங்கே ஒவ்வொரு நாளும் குடிப்பழக்கத்துக்கும் ,மதுவுக்கும் அடிமையாகும் நிலை அதிகரித்துக்கொண்டே போகிறது .அதைப்பற்றி இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை;கவலையில்லை – கனிமொழி ,ஏப்ரல் 10,2016

திமுக தேர்தல் அறிக்கையில் (2016),மதுவிலக்கை அமல்படுத்த தனி சட்டம் கொண்டு வரப்படும் .டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கலைக்கப்படும் . அதில் பணியாற்றும் ஊழியருக்கு மாற்று வேலை தரப்படும் என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது .மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்கு தான் .எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று உறுதி அளிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்,ஏப்ரல்20,2016

திமுக தேர்தல் அறிக்கையில் (2021) எங்கும் பூரண மதுவிலக்கு என்றோ ,மதுக்கடைகளை குறைப்போம் என்றோ வாக்குறுதி கொடுக்கவில்லை – செந்தில் பாலாஜி ,பிப்ரவரி 2,2023
Share on: