வங்கிகளின் வட்டி வசூல் ரிசர்வ் வங்கி அதிருப்தி!


வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள், வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், இதனை திருத்திக் கொண்டு, பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கே திருப்பி வழங்குமாறும், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் வரை இந்நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட நேரடி பரிசோதனைகளின் போது, வட்டி வசூலிப்பதில் சில நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நியாயமான நடைமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், இதனை திருத்திக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது. உதாரணமாக, சில நிறுவனங்கள் கடன் தொகை விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து வட்டி விகிதத்தை வசூலிக்காமல், கடன் ஒப்பந்தம் மேற்கொண்ட நாளிலிருந்தே வசூலிக்க தொடங்கி விடுகின்றனர். காசோலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இதே போன்று நடைபெறுகிறது.

இன்னும் சில நிகழ்வுகளில், கடன் திருப்பி செலுத்துவதில் கால தாமதம் ஏற்படும் சூழலில், ஒரு மாதத்தின் இடையிலேயே அந்த தொகை திருப்பி செலுத்தப்பட்டாலும் முழு மாதத்திற்கும் வட்டி வசூலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
Share on: