அதிமுக தொண்டர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் – திரு கே.சி.பழனிசாமி

அதிமுக விற்கு தலைமை தாங்க இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார் திரு,கே,சி,பழனிசாமி அவர்கள் .அதுபோக ஜூம் மீட்டிங் நடத்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார் .இதுவரை 200இக்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்களை நடத்தி இருக்கிறார் திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் .மேலும் எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களைஒன்றிணைத்து ,அதிமுக பொது செயலாளர் பதவிக்காக தனியாக தேர்தல் நடத்தி ,தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து ,இரட்டை இல்லை சின்னமும் கட்சியும் எங்களுக்குத்தான் என உரிமை கோரும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கே.சி.அ.தி.மு.க எவ்வித பிளவுமின்றி ஒருங்கிணைத்தால். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் மேலும் பாஜக எதிர்ப்பு அலை மேலோங்கும். தலைமை பிளவு இருந்தால். திமுக, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும், இபிஎஸ் ஓரங்கட்டப்படுவார். எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை பின்பற்றுவதும் உட்கட்சி பூசலில்லாமல் அதிமுகவை ஒருங்கிணைப்பதும் அதிமுக தொண்டர்களின் கையில் உள்ளது. இல்லையெனில் இபிஎஸ் & ஓபிஎஸ் இருவரையும் தொண்டர்கள் வெளியேற்ற வேண்டும். சாதிய & ஊழலற்ற தலைமையை தொண்டர்களின் மூலமாக தலைமையை தேர்ந்தெடுங்கள். ஒருங்கிணைந்த அதிமுக உருவானால் தான் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக இல்லாத திமுக அதிமுக‌ நேரடி போட்டியாக அமையும் அதிமுக வெற்றி பெறும்.
ஒற்றுமை ஏற்படாவிட்டால் போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கு மாக மாறும் அதிமுக பெறும் வீழ்ச்சியை சந்திக்கும்.. ஊழலற்ற மதசார்பற்ற ஜாதிய பாகுபாடு இல்லாத தலைமையால் மட்டுமே அதிமுகவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
தொண்டர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

Share on: