“புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் நாங்கள் “

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள்,அம்மாவை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் ,அம்மா மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை பார்த்தோ ,ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பார்த்தோ அண்ணா திமுகவிற்கு வந்தவர்கள் யாருமே இல்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை .இவர்களால் வாகு சிதறடிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய ,காட்சிபலவீனமாய் போனதில் இருந்து இன்று வரை மீளவே முடியவில்லை .அதாவது வெற்றி பெறுவதற்கு மட்டும் தான் 1 லட்சம் ஓட்டுகள் தேவைப்படும் ,ஆனால் தோற்கடிப்பதற்கு வெறும் 2000 ஓட்டுகள் மாறினால் போதுமானது .எனவே வருகின்ற சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் யார் கட்சியை வெற்றி பெற வைக்கிறார்களோ அவர்களின் பின்னால் தான் கட்சியும் தொண்டர்களும் அணிவகுத்து வருவார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது .நீதிமன்றத்தின் மூலமாக ஒரு கட்சியின் தலைமை தீர்மானிக்கப்பட்டுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பினால் அது அவர்களுடைய அரசியல் அறியாமையை காட்டுகிறது .எனவே அரசியல் என்பது தொண்டர்களால் ,மக்களால் வாக்களித்து யார் ஆட்சி அமைக்க முடிகிறார்களோ அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் .அது நீதிமன்றத்தால் கூட நிர்ணயிக்க முடியாது . கே.சி.பழனிசாமி அவர்கள் ஒரு பேட்டியில் அண்ணாதிமுக கடல் என்றால் ,அதில் பதவி ஆசை பிடித்தவர்கள் தான் கப்பல் ஆகின்றனர் என்று கூறினார் .ஆனால் அண்ணா திமுக தொண்டர்கள் அந்த பதவி ஆசை பிடித்தவர்கள் கிடையாது .இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள சண்டையில் பாஜக தன்னை வளர்த்துக்கொள்ள நினைக்கின்றது .திமுக தன்னை பலப்படுத்திக்கொள்ள நினைக்கின்றனர் .எனவே இப்பொழுது அண்ணாதிமுக தொண்டர்கள் விரும்புவது ஒரு வலிமையான அதிமுக தேவை என்பதே ,அதுவும் தொண்டர்களால் மட்டுமே தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக உள்ளனர் .

Share on: