அதிமுகவின் பலம் என்பது அண்ணாதிமுக தொண்டர்களிடம் மட்டுமே உள்ளது. கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் இதற்கு முன்னரே தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் அவர் இருந்துள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த விசாரணைக்கு முதலமைச்சர் காலம் தாழ்த்தியது ஏன் ? குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றிருந்த அன்றைய தேதியில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிருக்க மாட்டார் எந்த மதத்தை சார்தரவர்கள் தவறு செய்திருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.