அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு புரட்சித்தலைவர் MGR,அம்மாவை பின்பற்றாமல் கருணாநிதியை தான் பின்பற்றுகிறார் EPS!


எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,அம்மாவை பின்பற்றாமல் கலைஞர் கருணாநிதியை தான் பின்பற்றுகிறார்!

தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் அதிமுக செய்தி தொடர்பாளர்களை அழைத்து “முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் ஆட்சியின் செயல்பாடுகளை சரியான புள்ளி விவரங்களோடு பேசவேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவை இழிவுபடுத்தும் செயல். இந்த செயலுக்கு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்.
Share on:

எடப்பாடி ஆட்சியில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்கள் அழிப்பு!


எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதிமுக சார்பில் மதுரையில் பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள்

மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவர்களும், கட்சியின் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் சேருபவர்களும் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

கொடநாடு தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையான குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும். கொடநாடு சம்பவம் நடந்த போது துணை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ்.
Share on:

செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம்! நீதிபதி அதிரடி!


செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அதில் அமலாக்கத் துறை தரப்பும் மேகலா தரப்பும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைத்த போது குறுக்கிட்ட நீதிபதி காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும். அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும், காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாட்களை கருத்தில் கொள்ளக் கூடாது என கோர முடியாது என்றார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிட்டார்.
Share on:

“”நாடகம் ஒன்று நடக்குது தமிழ்நாட்டிலே “”


நாட்டில் நடக்கும் இன்றைய நீதிமன்ற நாடக கூத்துக்கு நீதிமன்றத்தால் தீர்ப்பு கிடைக்காது , 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள்தான் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள். அதற்கு அஇஅதிமுக , பாமக , தினகரன் ,ops , சசிகலா ,தேமுதிக , தமாகா , புரட்சி பாரதம் , புதிய தமிழகம் , புதிய நீதிகட்சி என்று. இன்ன பிற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்தால் தான் தமிழகத்தில் நடக்கும் திமுக ஊழல் அரசாங்கம் , ஏழைகள் உழைப்பை உறிஞ்சும் இந்த மக்கள் விரோத அரசுக்கு முடிவுரை கிடைக்கும் .மத்தியிலும் 2024-ல்பாஜக ஒழியும் , இல்லையென்றால் திமுகவும் , பாஜகவும் வென்றுவிட்டால் , இறைவன் புரட்சித் தலைவர் உருவாக்கிய மக்கள் தர்ம பேரியக்கம் பாஜகவால் அழிக்கப்பட்டுவிடும். பாஜகவின் குரூர செயலை நினைவுரு இறந்த ஒருவரை (அம்மையாரை ) குற்றவாளிஆக்கி அஇஅதிமுகவை அழிக்க மீதி இருப்பவர்களை அடிமையாக்கும் இந்த பாஜகவின் கொடூர செயலை இயக்கத்தினர் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊழலின் அகராதியான திமுக கருணாநிதி குடும்பத்தை காப்பாற்றி இன்று வரை கரை சேர்க்கிறது பாஜக அதுமட்டுமல்ல அவர்களை என்றும் காப்பாற்றும் , காரணம் இதுதான் வாஜ்பாய் 13 மாத ஆட்சி ஆதரவை அம்மையார் வாபஸ் பெற்றதுதான் , அடுத்து 1999-2004 வரை கருணாநிதி வாஜ்பாய் அரசாங்கத்தை காப்பாற்றிய நன்றி கடன் , இப்படிப்பட்ட பாசிச பாஜகவுடன் இனி எடப்பாடி கூட்டணி வைத்து ops, சசிகலா, தினகரன் இவர்களை வேண்டாம் என்று அடம்பிடித்தால் அஇஅதிமுவை அழித்த கருணாநிதி எடப்பாடி என்று ஆகிவிடும் , தாயுள்ளத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் இருதலைவர்களின் புகழையும் , வெகுஜன பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும்.இல்லையேல் அஇஅதிமுகவைஅழித்தது எடப்பாடி மற்றும் கூட்டாளிகள் என்ற வரலாறு உருவாகும். வரும் தேர்தலில் நிச்சயம் இந்த மூவரால் அஇஅதிமுக வாக்கு 10% முதல் 15% வரை வாக்கு எல்லா தேர்தலில் பிரியும், அமமுக முதல் தேர்தலில் வாங்கிய 6 சதவிகித வாக்குகள் எல்லாம் சேரும் , அஇஅதிமுக சிதறும் , 2026க்குள் பிஜேபி அஇஅதிமுகவை அழிக்கும். எடப்பாடி அவர்களே அனைவரையும் ஒன்றினணயுங்கள் , இல்லையேல் தமிழக மக்களின் பேரீயக்கத்துக்கு பேராபத்து . இயக்கத்தின் மூத்த தொண்டன்: mgr ஆனந்தன்.
Share on:

பள்ளி மாணவர்களை கட்டட வேலை செய்ய வைத்த தலைமை ஆசிரியர்


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலக்குடிமுளை என்ற ஊராட்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்ப்பவர் சரவணன். இவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் அருண் சூசை என்பவரிடம் நிதி வாங்கி, 20 லட்சம் ரூபாயில் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி கட்டுகிறார்கள்

அதற்கு ஒப்பந்ததாரர்கள் வேலை பார்த்தாலும், கல் எடுக்க, மண் எடுக்க,சுவற்றுக்கு தண்ணீர் பிடிக்க போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உள்ளார்கள். அதன் அடிப்படையில் செய்தி வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி தலைமை ஆசிரியர் கூறும் போது, யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பள்ளி மாணவர்கள் தாங்களாக முன் வந்து பள்ளிக்கு வேலை பார்த்தார்கள். அவர்களாக விருப்பப்பட்டு வேலை பார்த்தார்கள் . எனினும் இது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
Share on:

திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தலைகுனிவு..


திமுக அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில்‌ கொலை, கொள்ளை, பாலியல்‌ வன்கொடுமை, போதைப்‌ பொருள்‌ விற்பனை, போன்ற சம்பவங்கள்‌ கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும்‌, நாளிதழ்களிலும்‌ வெடிகுண்டு மற்றும்‌ பெட்ரோல்‌ குண்டு வீச்சு; கத்தியால்‌ வெட்டிக்கொலை; செல்போனுக்காக ஓடும்‌ ரயிலில்‌ பெண்ணை தள்ளிக்‌ கொலை; சாலையில்‌ செல்லும்‌ பெண்களிடம்‌ நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள்‌ தமிழகத்தில்‌ பல இடங்களில்‌ நடந்தேறி வருகிறது. இதன்‌ காரணமாக பொதுமக்கள்‌ பாதுகாப்பின்மை கருதி வெளியில்‌ செல்ல அச்சமடைந்துள்ளனர்‌. தொடர்ந்து, தமிழகத்தில்‌ இதுபோன்ற அராஜகமான நிகழ்வுகள்‌ அதிக அளவில்‌ நடைபெற்று வருகிறது.

சென்னையில்‌ கல்லூரி மாணவி அஸ்மிதா நந்தம்பாக்கம்‌ ஏழு கிணறு தெருவில்‌ நடந்து வந்தபோது நவீன்‌ என்பவன்‌ கத்தியால்‌ குத்தி படுகாயம்‌. விழுப்புரம்‌ மாவட்டம்‌, திண்டிவனம்‌ அருகே உள்ள சின்ன நெற்குணம்‌ பகுதியைச்‌ சேர்ந்த பூசாரி திரு. காமராஜ்‌ அவர்களை வழிமறித்து, மர்ம நபர்கள்‌. சரமாரியாக வெட்டிக்கொலை. திருநெல்வேலி மாவட்டம்‌, ஏர்வாடி அருகே முன்‌ விரோதம்‌ காரணமாக விவசாயி திரு. அருணாசலம்‌ என்பவர்‌ 3 பேர்‌ கொண்ட கும்பலால்‌ வெட்டிப்‌ படுகொலை.

திமுக அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில்‌ கொலை, கொள்ளை, பாலியல்‌ வன்கொடுமை, போதைப்‌ பொருள்‌ விற்பனை, முதியவர்கள்‌. குறிவைத்து தாக்கப்படுதல்‌ போன்ற சம்பவங்கள்‌ நடைபெற்று வருகிறது என்று பேட்டியின்‌. வாயிலாகவும்‌, அறிக்கைகளின்‌ வாயிலாகவும்‌, சட்டமன்றத்திலும்‌ நான்‌ எடுத்து வைத்து வருகிறேன்‌. எனினும்‌, இந்த விடியா திமுக அரசு பதவியேற்றது முதல்‌ தமிழகத்தில்‌ சட்டம்‌ ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை
Share on:

டிரான்ஸ்பார்மர் கொள்முதல்! முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை! மின்சார வாரியம் மிகத் திட்டவட்டம்


டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அமைச்சர் செந்தில்பாலாஜி முறைகேடு நிகழ்த்தியதாக அறப்போர் இயக்கத்தினர் முன் வைத்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்திறுக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்

மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், மேற்காணும் நிறுவனங்கள் உள்ளுரிலேயே பல வருடங்களாக இயங்கி வருவதால், அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் குறித்து தெரிய வாய்ப்புள்ளது

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம்-1998 (Tamil Nadu Tender Transparency Act 1998), விதி எண்.10(5)-ன்படி தமிழக மின்வாரியத்திற்குத் தேவையான மின்மாற்றிகளை தகுதி வாய்ந்த அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கும் பிரித்து வழங்கி மேற்படி விதிகளின் படி கொள்முதல் ஆணை அளிக்கப்பட்டுள்ளது

மின்மாற்றிகளின் விலையை கணிக்கும்போது அலுமினிய மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையை அடிப்படையாக வைத்து, 25 சதவீதம் விலையை அதிகரித்து தாமிர மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையோடு ஒப்பீடு செய்திருப்பது தவறானதாகும்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் ஐந்து வருடகால உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் உத்தரவாத காலம், பணம் செலுத்தும் கால அளவு, கொதிநிலை ஏற்புத் திறன் அளவு, காப்பர் மின்சுருள் அளவு போன்ற காரணிகளால், மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் விலைகளோடு ஒப்பிட இயலாது
Share on:

டெண்டர் என்பதே குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கு தான்


டெண்டர் என்பதே குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கு தான். ஆனால் இவர்கள் முன்கூட்டியே சந்தை விலையை விட மிக அதிகமாக தொகையை இறுதி செய்துவிட்டு ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் அதே தொகைக்கு டெண்டர் கொடுக்க வைப்பது எவ்வளவு பெரிய மோசடித்தனம்.

இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட 400 கோடி இழப்புக்கு யார் பொறுப்பு? முதல்வர் ஸ்டாலின் அவர்களா? அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களா? ராஜேஷ் லக்கானி அவர்களா? இந்த மோசடியை செய்வதற்காகவே காசி என்ற நபரை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்தது யார்? அவர் தினமும் அலுவலகம் செல்லாமல் அமைச்சர் வீட்டுக்கு சென்று என்ன செட்டிங் செய்தார்?
Share on:

பணியில் இல்லாத அதிகாரி பெயரில் கட்டட அனுமதிக்கான கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது!


பணியில் இல்லாத அதிகாரி பெயரில் கட்டட அனுமதிக்கான கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது!

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ வில், கட்டுமான திட்ட பணிகள், “ஆன்லைன்” முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த 2022 மே மாதம் அமலுக்குவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நிலை அதிகாரியும் தங்கள் கருத்தையும், ஒப்புதலையும் “டிஜிட்டல்” முறையில் பதிவிடவேண்டும்.

இந்த நிலையில் ஜெயந்தா, சரவணன் தங்களது முதுநிலை பட்டப்படிப்பு படிக்க பணியில் இருந்து செப்டம்பர் 2022 விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர்,டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023 வழங்கப்பட்ட கட்டட அனுமதி கடிதங்களில் ஜெயந்தாவின் “டிஜிட்டல் கையெழுத்து” இடம்பெற்றுள்ளது.

நீண்ட விடுமுறையில் சென்ற ஒரு அலுவலர் எப்படி அதிகாரப்பூர்வ கடிதங்களில் கையெழுத்திட முடியும்?
Share on:

“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்”


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓபி ரவீந்திரநாத். தற்போது இவர் ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் அதிமுக சார்பில் மக்களவைக்கு சென்ற ஒரே ஒரு உறுப்பினர் அவர் மட்டும்தான்.

இந்த நிலையில் இவர் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகவும், பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறி அவர் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் இன்று அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிந்தவுடன் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் என்ற கால நிர்ணயம் இருக்கிற பொழுது. அந்த வழக்கின் தீர்ப்பு ஏன் குறிப்பிட்ட காலத்திற்குள் (சுமார் 90 நாட்களுக்குள்) வழங்கப்பட கூடாது. தாமதிக்கக்ப்பட்ட தீர்ப்புகளால் எந்தவித பலனும் இல்லை.
Share on: