கலத்திலும், மக்கள் மனதிலும் அதிமுகவே முதன்மையான எதிர்க்கட்சி !! – திரு கே.சி. பழனிசாமி

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசியது ,களத்திலும் ,மக்கள் மனங்களிலும் ,வாக்கிலும் சரி மற்றும் தொண்டர் பாலத்திலும் சரி,என்று எந்த அடிப்படையில் பார்த்தாலும் அண்ணாதிமுக மிக வலிமையாக கட்சியாக உள்ளது .மத்தியில் ஆளுகிற கட்சியாக உள்ளதால் பாரதீய ஜனதா கட்சி பேசப்படுகிறது .காங்கிரஸ் ஆளுகின்ற பொழுதிலும் கூட அந்த கட்சியின் தலைவர்கள் இது போன்று பேசுவதுண்டு .அதேபோல தான் இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் .அடுத்து அண்ணா திமுகவிற்குள் அந்த தலைமை பிரச்சனை இன்னும் முடிவிற்கு வருவதாக தெரியவில்லை .யாருடைய தலைமையில் ஒன்றுபட்ட அதிமுக இயங்குகிறது என்ற பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றது .ஆனால் அவர்கள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் ஆனாலும் இருக்கலாம் .உட்கட்சி கருத்துகள் அனைத்தையும் மறந்துவிட்டு அனைவரும் எதிர்த்து நிற்பது திராவிட முன்னேற்ற கழகத்தை .குறிப்பாக அதில் யாரும் திமுகவை ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரும் அண்ணா திமுகவில் கிடையாது .அதேபோல பாரதீய ஜனதா கட்சியையும் எதிர்த்து நாம் அரசியல் காலம் காண வேண்டும் என்கின்ற கருத்தில் கூட அண்ணாதிமுக தொண்டர்கள் உறுதியாக இருக்கின்றனர் .எனவே எதிர்கட்சி என்பது அனைத்து நிலைகளிலும் அண்ணாதிமுகவாக மட்டுமே இருக்கின்றது .இன்னும் அனைவரையும் அரவணைத்து செல்லுகின்ற தலைமையாக இருந்திருந்தால் இந்த தேர்தலிலேயே ஆட்சி அமைகின்ற கட்சியாக அண்ணாதிமுக வந்திருக்கும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார் .

Share on: