ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே. எஸ். தென்னரசு வேட்பாளராக போட்டியிடுகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளைகளில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யார் வேட்பாளர் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.நேற்றுன் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல்கள் சற்று தளர்வடைந்திருக்கிறது.ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக அதிமுக சார்பில் போட்டியிடுவதாக வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்றிருக்கிறார்.ஊழலாட்சி திமுகவை தோற்கடிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில், ஓபிஎஸ் கழகத்திற்காக இம்முடிவை எடுத்திருக்கிறார்.ஓபிஎஸ்- ன் இம்முடிவு “இரட்டை இலை” சின்னத்தை காப்பாற்றியிருக்கிறது.மேலும் பொய் பிரச்சாரங்கள் மூலம் மக்களை வஞ்சித்து ஓட்டு பெற்று ஆ்டசியை பிடித்த திமுகவை வீழ்த்த ஈரோடு இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும்.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று முடிவடைகிறது. அதிமுக சார்பில் கே. எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.தேர்தலில்,இபிஎஸ் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் போட்டியிடுவதால், அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் தலைமையை ஏற்றதாக அர்த்தமில்லை.அதிமுக தலைமை பிரச்சனையில்,ஈரோடு இடைத்தேர்தல் என்பது தற்காலிக ஏற்பாடாக தான் அமைந்துள்ளது.தேர்தலில் வெற்றி தோல்வியை பொறுத்து அதிமுக தலைமைக்கான யூகங்கள் அமையலாம்.
இந்த தொகுப்பினை வீடியோவடிவில் காண
https://youtu.be/2joGRwAkQ6Y