அதிமுக பொதுக்குழு வழக்கில் கடந்த ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுகவில் யார் தலைமை என்ற விவாதமும் போட்டியும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், உச்சநீதிமன்றம் இன்று காலை இபிஎஸ் தலைமையில் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் எனவும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.மேலும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் தர்மயுத்தம்:<br>ஓபிஎஸ் -இபிஎஸ் யுத்தத்தில் இபிஎஸ் வெற்றி பெற்றதாக அவரது தரப்பினர் பெருமகிழ்ச்சியடைந்து கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.இந்த தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு,தனக்கு சாதகமான முடிவுகளை நீதிமன்றத்தின் வாயிலாக,எடுக்கின்றது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.பொதுக்குழு மூலம் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அதிமுக விதிமீறல்.
அதிமுக கொள்கைப்படி, தலைமை தொண்டர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.தொடர்ந்து ஆயிரக்கணக்கான அதிமுக உறுப்பினர்களை காரணமின்றி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.பல விதிமீறல்களை செய்த இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கலாம் என அறிவித்திருப்பது பாஜகவின் சுயநலத்திற்காக மட்டுமே. இபிஎஸ்-க்கு இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பாஜகவுக்கு அடிபணிந்து செயல்படும் வரையில் மட்டுமே.பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை இபிஎஸ் எடுத்தால், பாஜக தனது ஆதிக்கத்தை செலுத்தி மீண்டும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ளப் போகிறது. இபிஎஸ் ஓபிஎஸ் தர்ம யுத்தத்தில் இபிஎஸ் வெற்றி பெறவில்லை மாறாக பாஜக தான் தனக்கேற்றவாறு காய் நகர்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த தொகுப்பினை வீடியோவடிவில் காண
https://youtu.be/2joGRwAkQ6Y