அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை டிசம்பர் 4-ம் தேதியில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4 -ம் தேதி தான் அம்மாவின் இறப்பு நாளாக அறிக்கை வெளியிட்டது.
இந்த ஆணையத்தை அமைத்த எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
இது அறிக்கை குறித்து எந்தகருத்தும்முன்வைக்கப்படவில்லை.இந்நிலையில்,கே.சி.பழனிச்சாமி அறிக்கையை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் ஜெயலலிதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.டிசம்பர் 5 ல் ஜெயலலிதா நினைவு தினம் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டசபை துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனி கோஷ்டியாக ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது ஒவ்வொரு அணியினரும் உறுதிமொழி ஏற்றனர். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மா மறைந்த இந்நான்னாளில் என கூறி உறுதிமொழி வாசித்தார். இதனை திருத்தாமல் கட்சி நிர்வாகிகளும் உரத்த குரலில் உறுதிமொழி ஏற்றனர்.இதேபோல், பன்னீர்செல்வம் அணியில் ஜே.சி.டி பிரபாகர் உறுதிமொழியை வாசிக்கும் போது,அதே தவறை நன்னாள் என கூறி உறுதிமொழி ஏற்றார்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதனை பின்தொடர்ந்து உரத்த குரலில் உறுதிமொழி ஏற்றனர்.இந்த உறுதிமொழியின் வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வேகமாக பரவின. கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த நாள் என்பது கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்னாளா என தொண்டர்கள் கவலையுடன் பேசி வருகின்றனர்.எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் அதிமுகவில் இணைந்து செயல்பட இன்னும் கட்சி பணிகள் பலவற்றை செய்ய வேண்டும்.டிடிவி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இடைச்செருகலாக தான் வந்தார்.டிடிவி தினகரனை சேரத்து கொள்வதற்கு என்பது நடக்காத ஒன்று.
கட்சியிலிருந்து வெளியேற்றபட்டவர்கள் மீண்டும் இணைய கூடாது-ஈபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி செயல்பட விரும்புகிறவர்களை மட்டும் தன்னுடன் வைத்து கொள்வார். தனக்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வெளியேற்றபடுவார். மீண்டும் அந்நபர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படுவேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே கட்சியில் இணைத்து கொள்வார். அரசியலில் கொள்கை சார்ந்து தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தனிநபர் சுயநலன் சார்ந்து முடிவுகள் எடுக்கப்பட கூடாது. ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக பாஜகவை ஆதரித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பாஜவை மறைமுகமாக ஆதரிக்கிறார்.
பொதுக்குழு வழக்கு அமர்வு மாற்றப்பட்டுள்ளது -விரைவில் தீர்ப்பு வருமா?
பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு புதிய அமர்விற்கு மாற்றப்பட்டால் அதே நாளில் விசாரணை நடக்காது. புதிய வழக்கு என்றால் பிரச்சனை இல்லை. பழைய வழக்கு என்றால் ஏற்கனவே வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் படிக்க வேண்டும். வழக்கின் தன்மையை உணர்ந்து முடிவு வர நாளாகும்.
எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு எதிராக செயல்பட துவங்கும் போது, அவரிடம் பணமும் இருக்காது, தங்கமணி வேலுமணி போன்றோரும் இருக்க மாட்டார்கள்.அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் மெகா கூட்டணி வைக்கும்: பாஜக கட்சி மற்றும் பாஜகவுடன் கூட்டணி உள்ள கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைத்து கொண்டால் நிச்சயம் தமிழக மக்கள் அதிமுகவை புறந்தள்ளி விடுவார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்படி தொண்டர்களால் ஒற்றை தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.பாஜக திமுக இரண்டையும் எதிர்த்து தேர்தலில் தனித்து போட்டியிட்டாலே அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் எம்பி கே. சி பழனிசாமி கூறினார்.
கே.சி.பழனிசாமியின் முழு நேர்காணலை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்!
https://youtu.be/ZZZVGfcklTk