பொதுச் செயலாளர் தேர்தல் கோருதல் - கே.சி.பி

அம்மா ஆட்சியின் மாட்சி

சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை : விஞ்ஞானப் பயனை விரைந்து பெற மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மகளிர் பணிச்சுமை குறைக்க விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்

அரசின் சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்திட முதன்முறையாக தனித்துறை உருவாக்கம். விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கல் மகளிரின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக 1.85 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ரூ.6,870 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 95,93,432 பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாணவ / மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் ரூ.5,365.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 21,65,289 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறை : சொகுசான பேருந்துகள் – சொக்கவைக்கும் பயணங்கள்

  சென்னையில் மோனோ இரயில் திட்டத்தை ரூ.8,500 கோடி செலவில் முதற்கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 43.48 கி.மீ. தூரத்திற்கு DBFOT முறையில் செயல்படுத்திட அரசு அனுமதி. ரூ.236.63 கோடி செலவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளி மூலம் 25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திர நிலையம். நான்காண்டுகளில் 7,153 புதிய பேருந்துகள் ரூ.1,354.21 கோடியில் வாங்க ஆணை. இதுவரை 4,572 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. ரூ.48.79 கோடி செலவில் 713 பழையப் பேருந்துகள் புதுபிக்கப்பட்டு இயக்கம். …

Share on:

தமிழ் வளர்ச்சித் துறை : தெருவெங்கும் தமிழ் முழக்கம் உலகளாவிய தமிழ் வளர்ச்சி

ரூ.3.20 கோடி செலவில் உலகச் செவ்வியல் மொழிகளான சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்ப்பு. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000/- 01.12.2011 முதல் ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும், 22.12.2014 முதல் மருத்துவப் படியும் ரூ.100/-ஆக வழங்கப்படுகிறது. ரூ.19.75 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் அலுவலகங்களுக்கும் தளவாடங்கள் வழங்கித் துறைப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிற மொழிகளிலிருந்து 1,000 …

Share on:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை : மாவட்டந்தோறும் கிராம விளையாட்டு மையங்கள், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள்

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவர்க்கு பரிசுத் தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்வு. ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.50 இலட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 இலட்சமாகவும், வெண்கல பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 இலட்சமாகவும் உயர்வு. சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம் ரூ.1.70 கோடி செலவில் அமைப்பு. முதன் முறையாக மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் ரூ.15 இலட்சம் செலவில் நடத்தப்பட்டன. …

Share on:

-->