அதிமுக பொதுக்குழு வழக்கில் கடந்த ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுகவில் யார் தலைமை என்ற விவாதமும் போட்டியும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், உச்சநீதிமன்றம் இன்று காலை இபிஎஸ் தலைமையில் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் எனவும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.மேலும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் தர்மயுத்தம்:<br>ஓபிஎஸ் -இபிஎஸ் யுத்தத்தில் இபிஎஸ் வெற்றி பெற்றதாக அவரது தரப்பினர் பெருமகிழ்ச்சியடைந்து கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.இந்த தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு,தனக்கு சாதகமான முடிவுகளை நீதிமன்றத்தின் வாயிலாக,எடுக்கின்றது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.பொதுக்குழு மூலம் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக…
ஈரோடு இடைத்தேர்தலுக்காக “தற்காலிகமாக”இபிஎஸ் தலைமை!
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே. எஸ். தென்னரசு வேட்பாளராக போட்டியிடுகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளைகளில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யார் வேட்பாளர் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.நேற்றுன் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல்கள் சற்று தளர்வடைந்திருக்கிறது.ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக அதிமுக சார்பில் போட்டியிடுவதாக வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்றிருக்கிறார்.ஊழலாட்சி திமுகவை தோற்கடிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில், ஓபிஎஸ் கழகத்திற்காக இம்முடிவை எடுத்திருக்கிறார்.ஓபிஎஸ்- ன் இம்முடிவு “இரட்டை இலை” சின்னத்தை காப்பாற்றியிருக்கிறது.மேலும் பொய் பிரச்சாரங்கள்…
இரட்டை இலை சின்னத்திற்காக அவசர அவசரமாக மனு அளித்த இபிஎஸ்!!
இரட்டை இலை சின்னத்திற்காக அவசர அவசரமாக மனு அளித்த இபிஎஸ்!!எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் அவசர அவசரமாக மனு அளித்திருக்கிறார்.இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்:
ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும்.
அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல்…
ஈரோடு இடைத்தேர்தல் அதிமுகவில் கே. எஸ். தென்னரசு வேட்பாளர்!!செந்தில் முருகனை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்!
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஒபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில்,இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கேள்வி எழுந்தது.இதுகுறித்து,எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.மனுவை விசாரித்த
உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதில், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என அறிவித்தது.உச்சநீதிமன்ற ஆணைப்படி ,அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால், கடிதத்தை பெற்ற ஓபிஎஸ் தரப்பினர், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் கொடுக்கப்பட்டு,அவர்கள் மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார் வேட்பாளர்கள் என தெரிவிக்காமல், தென்னரசு பெயரை மட்டும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார் என குற்றம்…
சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களம் உச்ச நீதிமன்றத்தை நாடிய இபிஎஸ் தரப்பு இரட்டை இலை சின்னம் முடங்குமா ?
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையில், ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை…
பாஜக கூட்டணிக்காக காத்திருக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்- அதிமுகவுக்கு அவமானம் !!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. <br/>இதனால் இரட்டை சிலை சின்னத்துக்கு உரிமை கோரினால் அது முடக்கப்பட வாய்ப்புள்ளது. இது நடந்தால் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடும் சூழல் உருவாகும். இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. இதனால் இருதரப்பும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள்…
அதிமுகவில் தொடரும் ஓபிஎஸ்&இபிஎஸ் அணி தாவல்
அதிமுகவை அழிக்க மு.க.ஸ்டாலின் எண்ணுவதாக விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை,கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.மேலும் அதிமுகவை ஒழிக்க டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் முயற்சி செய்வதாக திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்றுதொடர்ந்து அதிமுகவினர் திமுகவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களின் அடிப்படை என்ன? என்ற கேள்வியின் அடிப்படையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கலந்து கொண்டார்.விவாதத்தில் கலந்து கொண்ட கே.சி.பழனிச்சாமி அதிமுகவை பலவீனப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி கங்கனம் கட்டி கொண்டு இருக்கிறார்.முதலமைச்சராக இருந்த இபிஎஸ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கி வெளியேற்றினார் தற்போது திமுகவில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை இபிஎஸ்-ல்…
திமுகவினல் தொடரும் மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல்
-அண்ணாவின் கொள்கை என்னானது?
பெரியார் – அண்ணா இடையே எவ்வளவோ கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், மணியம்மையை வாரிசாக்கும் முயற்சியைத் திருமணத்தின் மூலம் பெரியார் உறுதிப்படுத்த தொடங்கியபோதுதான் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் அண்ணா.
1949-ல் திமுகவைத் தொடங்கிய பிறகு, இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு முன்னுதாரணக் கட்சியாக அதை உருமாற்ற முற்பட்டவர் அண்ணா.அடுத்த நிலைத் தலைவர்களுக்குத் தலைமைத்துவத்தைப் பயிற்றுவிக்கும் நோக்கில், 1955-ல் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலேயே பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி,
“தம்பி வா… தலைமையேற்க வா!”
என்று நெடுஞ்செழியனை முன்மொழிந்தவர் தன் முடிவை ஏற்க மறுத்தவர்களிடம் சொன்னார்,
“நான் வலுவோடும் செல்வாக்கோடும் இருக்கும்போதே என் மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும் பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும். நான்…
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4 -ம் தேதி
அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை டிசம்பர் 4-ம் தேதியில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4 -ம் தேதி தான் அம்மாவின் இறப்பு நாளாக அறிக்கை வெளியிட்டது.
இந்த ஆணையத்தை அமைத்த எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
இது அறிக்கை குறித்து எந்தகருத்தும்முன்வைக்கப்படவில்லை.இந்நிலையில்,கே.சி.பழனிச்சாமி அறிக்கையை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் ஜெயலலிதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.டிசம்பர் 5 ல் ஜெயலலிதா நினைவு தினம் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி…
கலாட்டா செய்யும் வேலுமணி கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி !!
தமிழ் நிறம் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு: எடப்பாடி பழனிசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையை முன்வைத்து பாஜகவிடம் மன்றாடி கொண்டிருக்கிறார்.அவர் எண்ணியபடி, ஒற்றை தலைமையை பேசி தீர்த்து வைக்காமல் போனால் பாஜகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி துணிவார். பாஜக எதிர்ப்பு என்பது அதிமுக கொள்கையின்படி அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் உண்டு.அதனை எடப்பாடி பழனிசாமி பின்தொடர்வது…