
அதிமுகவின் அடுத்தது என்ன என்ற என்ன என்ற தலைப்பில் தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அதிமுக மாஜி அமைச்சர் கே. சி பழனிசாமி பங்கேற்றார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,2024 பொதுத் தேர்தலில் அதிமுக தலைமை பாஜக அல்லாத கூட்டணியில் போட்டியிட்டால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.அதிமுக பாஜக-வை எதிர்க்க வேண்டும்:பாஜக கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் கலத்தை திமுகவிற்கும் பாஜக விற்கும் உரித்தானதாக அமைப்பதற்காக எண்ணி செயல்படுகிறார்கள். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் வாக்கு வங்கி பாஜகவிற்கு எதிராக உள்ளது.அதனை தலைமை தாங்குவதற்கான பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதே உண்மை.மேலும் பாஜக கூட்டணியை அதிமுக தவிர்க்க நேர்ந்தால் அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள…