தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் கணக்கு காட்டவில்லை!


தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில்.வருமான வரித்துறையினர் பல்வேறு வகையான பரிவர்த்தனைகளில் 4,100 கோடி ரூபாய் மறைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அளித்துள்ளனர்.

கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் 110 கோடி,பத்துஐயிரம் வங்கிக் கணக்குகளில் 2,700 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்கள் மேலும் வங்கி தொடர்பான 500 கோடி பரிவர்த்தனை விவரங்கள் கணக்கில் காட்டப்படவில்லை. இந்த பரிவர்த்தனைகள் உட்பட ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை என தெரியவந்துள்ளது. இது அனைத்தும் யாருடைய பணம்?
Share on:

ஆளும் கட்சியான திமுக இந்த இரண்டு வருடத்தில் மக்களிடையே மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வைத்துள்ளது


திரு கே சி பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் zoom மூலமாக கலந்து கொண்ட கலந்துரையாடலில் கூறியிருப்பதாவது ,ஆளும் கட்சியான திமுக இந்த இரண்டு வருடத்தில் மக்களிடையே மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வைத்துள்ளது .அதேபோல பாஜகவும் இந்த 30 வருடத்தில் அதிகளவு அவப்பெயரை மக்களிடையே சம்பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார் .மேலும் கலந்துரையாடலின் பொழுது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் .

மேலும் பாஜக இந்திய அளவில் பெரிய கட்சியாக கூட இருக்கலாம் .ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மக்களிடையே அவர்களின் ஆட்டம் செல்லாது என்றும்,அண்ணாதிமுகவிற்கு தான் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ளது என்றும் ,பாஜக வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் தமிழகத்தில் ஏராளமாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்
Share on:

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!


தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது.

சிறுவர்களை போல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மிக்கு பலர் அடிமையாகி உள்ளனர். இதில் பணத்தைக் கட்டி விளையாடிய பலர் பணத்தை இழந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து வருவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்த போதும் இதில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது குறைந்தபாடில்லை.

இதே போல சங்கரன்கோவில் அருகே தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ரம்மியில் பணம் இழந்த விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது,

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வசிப்பவர் மாரி செல்வம். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையானதாக தெரிகிறது. இவர் அதில் சுமார் 10 லட்சம் வரை இழந்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்தினர் கண்டிக்கவே மன வருத்தத்தில் இருந்த இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்!


சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை தொடர்ந்து சாலை வரியையும் தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்.

சாலை வரி உயர்த்துவதற்கு முதலில் அனைத்து பகுதிகளிலும் நல்ல தரமான சாலை இருக்கிறதா என்று தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். சாலை வரி உயர்வதன் மூலம் சகலமும் உயரும் என்பது நிதர்சனமான உண்மை.
Share on:

அதிமுக உலகளாவிய தரவரிசையில் 7-வது மிகப்பெரிய தொண்டர்பலம் உள்ள கட்சி அதிமுக.

புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக உலகளாவிய தரவரிசையில் 7-வது மிகப்பெரிய தொண்டர்பலம் உள்ள கட்சியாக இருந்தும் தொடர்ந்து 8 முறை தோல்வியடைய காரணம் யார்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னம்,கையெழுத்து போடுகிற உரிமை இரண்டும் கொடுத்து உங்களால் வெற்றியை பெற இயலவில்லை.

இன்னும் தோல்விக்கு உண்மையான காரணத்தை உணராமல் இருப்பது அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி தகுதி இல்லாதவர் என்பதை காண்பிக்கிறது.

Share on:

Continue Reading

பிரதமர் மோடி இன்னும் இந்தியா என்பதை வெறும் குஜராத்தாகவே நினைக்கிறார்!


“அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான Google, காந்திநகரில் உள்ள Gujarat International Finance Tec-City (GIFT)-இல் அதன் உலகளாவிய நுண்தொழில்நுட்ப செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளது.

அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை Google நிறுவன CEO சுந்தர் பிச்சை சந்தித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.”

பிரதமர் மோடி இன்னும் இந்தியா என்பதை வெறும் குஜராத்தாகவே நினைக்கிறார். தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டை பற்றி அதிகம் பேசுகிறார் ஆனால் தமிழகத்தில் ஏன் இதுபோன்ற திட்டங்கள் தொடங்கப்படவில்லை?
Share on:

எம்.ஜி.ஆர்,அம்மாவின் லட்சியங்களுக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்து ஏன் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க கூடாது?


நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்கவேண்டும் என்று தங்களுக்குள் உள்ள பகையை மறந்து ஒன்றிணையும் பொழுது நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதையும் வென்று திமுகவை அப்புறப்படுத்தி அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர்,அம்மாவின் லட்சியங்களுக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்து ஏன் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க கூடாது?

#290th Zoom Meeting ஞாயிறு (25.06.2023) காலை 11:00 மணிக்கு நடைபெறும்,கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் உங்கள் தொலைப்பேசி எண்ணை COMMENT-யில் பதிவிடவும் or Direct Join Zoom Meeting https://us02web.zoom.us/j/5945119322 Meeting id: 5945119322
Share on:

RTO கட்டணங்களை தங்கள் இணையதளம் வழியாக ஏற்றுக்கொள்கின்றன!


RTO அலுவலகங்கள் இப்போது FC, சாலை வரி, அனுமதி, பசுமை வரி மற்றும் பிற கட்டணங்களுக்கான கட்டணங்களை தங்கள் இணையதளம் வழியாக ஏற்றுக்கொள்கின்றன. அந்த உத்தி ஊழலை ஒழிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது, இது பாராட்டப்பட வேண்டும்.

இருப்பினும், ஆர்டிஓ-அங்கீகரிக்கப்பட்ட முகவர்களையே நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் செலுத்த வேண்டிய 8000/- தொகை ரூ.25,500/- என லஞ்சம் கேட்கப்படுகிறது. இது முழு ஆன்லைன் கட்டணத்திற்கும் அமலாக்கத்தால் கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும், மேலும் முகவர்கள் மூலம் அனைத்து கட்டணங்களும் அகற்றப்பட வேண்டும்.
Share on:

நகைச்சுவையான பதிவு!

: ஹலோ சார், உங்களுக்கு என்ன வயசாகுது?

: 50.

: உங்க வெயிட்டென்ன, ஹைட்டென்ன?

: 70 கிலோ, 170 செமீ.

: கோவிட் வேக்சின் போட்டுக்கீட்டீங்களா?

: ஆமா, பூஸ்டர் வரைக்கும் போட்டுக்கிட்டேன்.

: சுகர், பிரஷர்ன்னு ஏதாச்சும்?

: இல்ல.

: உங்க ஃபேமிலில யாருக்காச்சும் இதெல்லாம் இருக்கா?

: இல்ல.

: எதாச்சும் சர்ஜரி பண்ணி இருக்கா?

: இல்ல.

: ஏதாச்சும் மெடிக்கல் ஹிஸ்டரி இருக்கா?

: இல்ல.

: கடைசியா எப்ப ஹெல்த் செக்கப் பண்ணீங்க?

: மே மாசத்துல.

: என்ன சொன்னாங்க?

: Absolutely fit. மலையத் தூக்கி என் தோள்ல வச்சா கூட ரெண்டு கிலோமீட்டர் அப்படியே நடப்பேன்.

: எதாச்சும் அலர்ஜி இருக்கா?

: இல்ல…. உங்களுக்கு என்ன வேணும்? நீங்க எந்த ஆஸ்பத்திரில இருந்து கூப்டுறீங்க?

: நான் டாக்டர் எல்லாம் இல்ல. அமலாக்கத்துறை ஆஃபீஸர். உங்க வீட்டுக்கு ரெய்டு வந்திருக்கோம், அதான் மொதல்ல மெடிக்கல் செக்கப் பண்ணிக்கிட்டேன். கொஞ்சம் கதவைத் தொறக்கறீங்களா?

Share on:

Continue Reading

திருப்பூர் மாநகராட்சி துடைப்பம் வாங்க ரூ.440 செலவு: ஆர்டிஐ பதில்


ஆகஸ்ட் 10, 2022 அன்று, குடிமை அமைப்பு இந்த கருவிகளை ஒரு விற்பனையாளரிடமிருந்து மொத்தம் ரூ. 21.58 லட்சத்தில் வாங்கியது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 800 துடைப்பக் குச்சிகளை தலா ரூ.440 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளது. ஆர்வலர் ஜான் சாமுவேல் தாக்கல் செய்த RTI வினவலுக்குப் பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பதிலின்படி, 6 ஜூன் 2022 அன்று, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிளாஸ்டிக் தொட்டிகள், துடைப்பான் தூரிகைகள், துடைப்பங்கள் உள்ளிட்ட 13 கருவிகளை வாங்குவதற்கு மாநகராட்சி டெண்டர் எடுத்தது.

ஆகஸ்ட் 10, 2022 அன்று, குடிமை அமைப்பு இந்த கருவிகளை ஒரு விற்பனையாளரிடமிருந்து மொத்தம் ரூ. 21.58 லட்சத்தில் வாங்கியது. இதில் கைப்பிடியுடன் கூடிய 800 துடைப்பம் குச்சிகள் ரூ.3.53 லட்சம். ஒவ்வொரு துடைப்பம் கொள்முதல் விலை ரூ.440 என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜான் சாமுவேல் கூறுகையில், “கம்பத்தில் கட்டப்பட்ட துடைப்பத்தின் விலை ரூ. 100 ஆகும். அங்கு நகராட்சி நிர்வாகம் ஒரு துண்டுக்கு ரூ. 440 செலுத்தியது. நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள வியாபாரிகளிடம் இந்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால் அதிகாரிகள் அதிக விலைக்கு வாங்கினார்கள். விலை, இது வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து, அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ​​டெண்டர் பணியை துவக்கி, உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். நான் RTI வினவலை தாக்கல் செய்தேன் மற்றும் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது, ​​குடிமை அமைப்பின் உயர் அதிகாரிகள் வாய் திறக்காமல் இருந்தனர்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறுகையில், “கடந்த ஆண்டு துப்புரவு பணியாளர்களுக்கு டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றேன். ஆனால், பொருட்களின் விலையுடன் தனித்தனியாக பட்டியல் போட்டு பார்க்கிறேன். அனைத்து காலகட்டங்களுக்கான சுகாதார உபகரணங்கள் தொடர்பான டெண்டர் ஆவணங்களும் பிரச்சினையில் ஆராயப்படும்.”

இது எந்த அளவுக்கு உண்மை என்று நிலவரம் தெரியவில்லை.

#Tiruppur #tiruppurdistrict #tiruppursmartvision #smartvision #TiruppurCorporation
Share on: