அ.தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவியாக இருந்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு கேள்விகளை எழுப்பியுள்ளது. ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே இனி செல்லும்’ என எடப்பாடியும் பன்னீரும் இணைந்து செய்த சட்டத்திருத்தத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன.
அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப் பட்டார் சசிகலா. அதை எதிர்த்து, மெரினா தியானப்புரட்சிக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வுக்கு உயிர்நாடியாக இருந்த இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி அணி, பன்னீர் அணி இடையே ஒற்றுமை ஏற்பட்டதும், இருதரப்பும் இணைந்து பொதுக்குழுவை நடத்தினர். அதில், கட்சியின் விதியில் மாற்றம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளைக் கொண்டுவந்தனர்….