
பெரியார் – அண்ணா இடையே எவ்வளவோ கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், மணியம்மையை வாரிசாக்கும் முயற்சியைத் திருமணத்தின் மூலம் பெரியார் உறுதிப்படுத்த தொடங்கியபோதுதான் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் அண்ணா.
1949-ல் திமுகவைத் தொடங்கிய பிறகு, இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு முன்னுதாரணக் கட்சியாக அதை உருமாற்ற முற்பட்டவர் அண்ணா.அடுத்த நிலைத் தலைவர்களுக்குத் தலைமைத்துவத்தைப் பயிற்றுவிக்கும் நோக்கில், 1955-ல் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலேயே பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி,
“தம்பி வா… தலைமையேற்க வா!”
என்று நெடுஞ்செழியனை முன்மொழிந்தவர் தன் முடிவை ஏற்க மறுத்தவர்களிடம் சொன்னார்,
“நான் வலுவோடும் செல்வாக்கோடும் இருக்கும்போதே என் மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும் பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும். நான்…








குழுவில் இணைய