திமுகவினல் தொடரும் மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல்
-அண்ணாவின் கொள்கை என்னானது?

பெரியார் – அண்ணா இடையே எவ்வளவோ கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், மணியம்மையை வாரிசாக்கும் முயற்சியைத் திருமணத்தின் மூலம் பெரியார் உறுதிப்படுத்த தொடங்கியபோதுதான் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் அண்ணா.
1949-ல் திமுகவைத் தொடங்கிய பிறகு, இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு முன்னுதாரணக் கட்சியாக அதை உருமாற்ற முற்பட்டவர் அண்ணா.அடுத்த நிலைத் தலைவர்களுக்குத் தலைமைத்துவத்தைப் பயிற்றுவிக்கும் நோக்கில், 1955-ல் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலேயே பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி,
“தம்பி வா… தலைமையேற்க வா!”
என்று நெடுஞ்செழியனை முன்மொழிந்தவர் தன் முடிவை ஏற்க மறுத்தவர்களிடம் சொன்னார்,
“நான் வலுவோடும் செல்வாக்கோடும் இருக்கும்போதே என் மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும் பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும். நான் வலுவிழந்த பிறகு மற்றவர்கள் பொறுப்பேற்றால், அப்போது கழகத்தைச் சீர்ப்படுத்தவோ செம்மைப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ என்னால் முடியாமல்போகும். வேறு யாராலும் முடியாமல் போய்விடும்!” திமுகவின் நிர்வாகிகளைத் தேர்தல் வழியாகவே தேர்ந்தெடுக்கும் நடைமுறையை உண்டாக்கிய அண்ணா, நாட்டிலேயே முதல் முறையாக 1967 தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வையும் அமெரிக்க பாணியில் கட்சியினர் வழி தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். அப்படிப்பட்டவர் தொடங்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் வாரிசு அரசியல் செய்வது பெரும் விதிமீறலாக அமைகிறது. திமுகவில் அண்ணா மறைவுக்குப் பிறகு, கலைஞர் அதனை பின்பற்றவில்லை.தனது மகன் ஸ்டாலினை கட்சிக்கு கொண்டு வந்தார்.கலைஞர் மறைவுக்குப் பிறகு முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமித்தார்.தற்போது அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற போகிறார் என்ற செய்தி அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியாகியுள்ளது. காலங்காலமாக திமுகவில் இருந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பல்வேறு தலைவர்களை புறந்தள்ளி விட்டு,ஒன்றரை ஆண்டுகளே பணி செய்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்படுவது வாரிசு அரசியலை திமுக என்றைக்கும் கைவிடாது என்று பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த தொகுப்பினை வீடியோவடிவில் காண
https://youtu.be/HLjZbSMQz2Y

Share on: