அஇஅதிமுக பற்றி அஇஅதிமுக பற்றி
- Home
- About us
எங்களது அஇஅதிமுக புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி. ராமசந்திரன் அவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவரை தமிழ்நாட்டு மக்கள் அன்போடு எம்.ஜி.ஆர் என அழைப்பார்கள். இவருடைய தொலைநோக்கு பார்வையில் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் பாதமற்;ற சூழலில் வாழும் மக்களுக்கு நல்ல நிலையில் வாழ வழிவகை செய்தார். இக்கட்சியின் நோக்கம் “கொடி பிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான்” முதன்மை நிலை உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் முடிவெடுப்பார்கள்.
-
1972
ஆம் ஆண்டு எங்களது அஇஅதிமுக புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ராமசந்திரன் அவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவரை தமிழ்நாட்டு மக்கள் அன்போடு எம்.ஜி.ஆர் என அழைப்பார்கள்.
-
1973
ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அஇஅதிமுகவுக்கு திண்டுக்கல் தொகுதில் “முதல் வெற்றி” கிடைத்தது
-
1977
ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றி” பெற்றது. தமிழ்நாட்டின் ஏழாவது முதலமைச்சராக எம்.ஜி.ஆர் அவர்களை 30.06.1977 அன்று உறுதி செய்யப்பட்டது. மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக பதவிவகித்தார். அஇஅதிமுக 1977,1980 மற்றும் 1984 நடைபெற்ற சட்ட மன்ற தேர்த்தலில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றது.
-
1980
ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டியுள்ள 234 தொகுதிகளில் 129 தொகுதிகளில் அஇஅதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார்.
-
1984
ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
-
1987
எங்களது அன்புக்குரிய தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 நாள் இயற்கை எய்தினார். இவரது தலைமையில் நல்லாட்சி முறை நடை பெற்றது.
-
1991
ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்தது.
-
2001
ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அஇஅதிமுக 132 தொகுதிகளில் வெற்றி பெற்;றது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்
-
2011
ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 232 தொகுதிகளில் 202 தொகுதியில் வெற்றி பெற்றது. அஇஅதிமுக மட்டும் 150 தொகுதிகளில் வெற்றி பெற்;றது.
-
2016
ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்றது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கப்ப்டடது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆறாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்