இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை : மாவட்டந்தோறும் கிராம விளையாட்டு மையங்கள், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள்

(English) AIADMK- All India Anna Dravida Munnetra Kazhagam party Jayalalitha

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவர்க்கு பரிசுத் தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்வு.

  • ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.50 இலட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 இலட்சமாகவும், வெண்கல பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 இலட்சமாகவும் உயர்வு.
  • சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம் ரூ.1.70 கோடி செலவில் அமைப்பு.
  • முதன் முறையாக மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் ரூ.15 இலட்சம் செலவில் நடத்தப்பட்டன.
  • நலிந்த நிலையில் உள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்வு.
  • தினப் பயிற்சி திட்டம் மற்றும் வார இறுதி பயிற்சித் திட்டத்திற்கு ரூ.69.32 இலட்சம் ஒதுக்கீடு.
  • தேசிய மாணவர் படை கப்பற்படை அலகு மிதவைப் பயணப் போட்டிக்கான நிதி ஒப்பளிப்பு ரூ.2 இலட்சமாக உயர்வு.
  • தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சிற்றுண்டிப் படி ஒரு மாணவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3/-லிருந்து ரூ.10/- ஆக உயர்வு.
  • குடியரசு தின முகாம்கள் செலவினம் ரூ.50 இலட்சமாக உயர்வு.
  • தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்களுக்கான ஊக்கத் தொகை 10 மாதங்களுக்கு 100 முதுநிலை மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200/- வீதமும் 100 இளநிலை மாணவ, மாணவியர்களுக்கு ரூ.100/- வீதம் 10 மாதங்களுக்கும் உயர்த்தப்பட்டது.
  • 2012-2013இல் தேசிய அளவிலான பைக்கா போட்டிகளில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாம் இடம்.
  • அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி அளித்திட கூடுதலாக 79 பயிற்றுநர்கள் நியமனம்.
  • சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் ரூ.2 கோடி நிதியுதவியுடன் நடத்தப்பட்டன.
  • ஜார்கண்டில் நடைபெற்ற 34ஆவது தேசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.30 இலட்சம் ஊக்கத் தொகை.
  • 5ஆவது முறையாக உலக சதுரங்க சேம்பியனாக வெற்றிபெற்ற திரு.விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு ரூ.2 கோடி ரொக்கப் பரிசு.
  • திருச்சிராப்பள்ளியில் செயற்கை இழை தடகள ஓடுபாதைக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு.
  • மதுரையில் செயற்கை இழை வளைகோல்பந்து ஆடுகளத்திற்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு.
  • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற வாய்ப்புள்ள தலைசிறந்த 5 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.25 இலட்சம் உதவித்தொகை.
  • 10 மாவட்டங்களில் தலா ரூ.1.50 கோடியில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கங்கள்.
  • நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நீச்சல் குளங்கள் அமைக்க தலா ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.70 இலட்சம் ஒதுக்கீடு.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் ஒன்றில் கிராம விளையாட்டு மையம் அமைக்க ரூ.62 இலட்சம் ஒதுக்கீடு .
  • குடியரசு தின விழா முகாம் மற்றும் அதைச்சார்ந்த முகாமில் பங்கேற்கும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்களுக்கு ரொக்க ஊக்கத் தொகை ரூ.5.80 இலட்சமாக உயர்வு.
  • கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ.25.05 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.4.15 கோடி செலவில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிய விளையாட்டு விடுதிகள்.
  • உலகத் திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தில் 3,240 திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.6,000 ஊக்க உதவித் தொகை.
  • ரூ.33.60 கோடி செலவில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் மற்றும் உள் விளையாட்டரங்கில் உள்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள்.
  • அரியலூர், நாமக்கல், சிவகங்கை, தேனி, பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.5.4 கோடி செலவில் புதிய விளையாட்டு விடுதிக் கட்டடங்கள்.
  • விருதுநகரில் ரூ.80 இலட்சம் செலவில் நீச்சல்குளம்.
  • ரூ.7 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம்.
  • 2012இல் ரூ.5.52 கோடி செலவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • தேனியில் கட்டப்பட்டு வரும் நீச்சல்குளப் பணிகளை முடிப்பதற்கு கூடுதல் நிதியாக ரூ.72.50 இலட்சம் ஒதுக்கீடு.
  • ரூ.4.50 கோடி செலவில் சென்னை டென்னிஸ் விளையாட்டரங்கம் மேம்பாடு.
  • ரூ.30 இலட்சம் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள்.
  • ரூ.25 இலட்சம் செலவில் கடற்கரை மாவட்டங்களில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
  • ரூ.8.09 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள்.
  • ரூ.36.88 இலட்சம் செலவில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் பல்லூடக ஊடக வகுப்பறை.
  • ரூ.2.20 கோடி செலவில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் மையம்.
  • ரூ.20 இலட்சம் செலவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பயிற்சிக்காக எடை குறைந்த சரி நுட்பத் திறன் வாய்ந்த நவீனரகப் துப்பாக்கிகள் வாங்குதல்.
  • கடற்படை என்.சி.சி. கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கப்பல் மாதிரி வடிவமைப்பு மானியம் கல்லூரி ஒன்றுக்கு ரூ.10,000/- லிருந்து ரூ.20,000/- மற்றும் பள்ளி ஒன்றுக்கு ரூ.5,000/- லிருந்து ரூ.10,000/- ஆக உயர்வு.
  • விமானப்படை என்.சி.சி. கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வானூர்தி மாதிரி வடிவமைப்பு மானியம் கல்லூரி ஒன்றுக்கு ரூ.10,000/- லிருந்து ரூ.20,000/- மற்றும் பள்ளி ஒன்றுக்கு ரூ.5,000/- லிருந்து ரூ.10,000/- ஆக உயர்வு.
  • ‘பிடே’ உலக சதுரங்க வாகையர் போட்டிகள் ரூ.29.15 கோடி செலவில் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • குடிசைப்பகுதி வாழ் மக்களுக்கு விளையாட்டு வசதிகளை உருவாக்கிட ரூ.26.44 இலட்சம் ஒதுக்கீடு.
  • சென்னை பல்நோக்கு விளையாட்டரங்கில் குளிர் சாதனம், மின் விளக்குகள் போன்றவற்றை மாற்றுவதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை ஓப்பன் சூப்பர் பேட்மின்டன் போட்டிகள் நடத்துவதற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு.
  • மாநில அளவிலான குடிமைப்பணிகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ.40.36 இலட்சம் ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும், உடற்பயிற்சிக் களம் அமைத்திடவும் ரூ.75 இலட்சம் ஒதுக்கீடு.
  • 2010இல் சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம் வென்ற திரு.எஸ்.நூருதீன் அவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டது.
  • 2010இல் ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை டென்னிகாய்ட் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற திரு.G. நாராயண சூர்யா அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டது.
  • 2010இல் சீனாவில் நடைபெற்ற 16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.13.50 இலட்சம் வழங்கப்பட்டது
  • 2010இல் புதுடெல்லியில் நடைபெற்ற 19ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.16.50 இலட்சம் வழங்கப்பட்டது.
  • 2009இல் மலேசியாவில் நடைபெற்ற 2ஆவது இளையோர் ஆசிய மாணவ, மாணவியர்களுக்கான கபாடி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற செல்வி ஆர்.எம். பியாரா அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டது.
Share on: