தமிழ் வளர்ச்சித் துறை : தெருவெங்கும் தமிழ் முழக்கம் உலகளாவிய தமிழ் வளர்ச்சி

#

 • ரூ.3.20 கோடி செலவில் உலகச் செவ்வியல் மொழிகளான சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்ப்பு.
 • அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000/- 01.12.2011 முதல் ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும், 22.12.2014 முதல் மருத்துவப் படியும் ரூ.100/-ஆக வழங்கப்படுகிறது.
 • ரூ.19.75 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் அலுவலகங்களுக்கும் தளவாடங்கள் வழங்கித் துறைப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
 • பிற மொழிகளிலிருந்து 1,000 புதிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாள் என அறிவிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு வழங்கப்பட்டுவந்த முதல் பரிசுத் தொகை ரூ.1,000/-லிருந்து ரூ.10,000/- ஆகவும், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.500/- லிருந்து ரூ.7,000/- ஆகவும், மாநில அளவிலான போட்டிகளுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.15,000/- ஆகவும், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3,000/-லிருந்து ரூ.12,000/- ஆகவும், மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2,000/-லிருந்து ரூ.10,000/- ஆகவும் 2011-2012ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
 • சிறந்த நூல் வெளியிடும் நூலாசிரியருக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.25,000/- லிருந்து ரூ.50,000/-ஆகவும் நிதியுதவி பெற நூலாசிரியர்களின் ஆண்டு வருமான வரம்பு ரூ.25,000/-த்திலிருந்து ரூ.50,000/-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
 • சிறந்த நூல் வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் ரூ.18.04 இலட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
 • சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் என்ற இரு புதிய வகைப்பாடுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
 • தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அமைப்புகள் / சங்கங்களை ஊக்கப்படுத்திப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகை கொண்ட `தமிழ்த்தாய் விருது’2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
 • தமிழறிஞர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் கபிலர், உ.வே.சா., கம்பர், சொல்லின்செல்வர், ஜி.யு. போப், உமறுபுலவர், இளங்கோவடிகள் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு முதல் (விருதுத் தொகை ரூ.1 இலட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை) வழங்கப்பட்டு வருகிறது.
 • கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் (விருதுத்தொகை ரூ.1 இலட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை) வழங்கப்பட்டு வருகிறது.
 • தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுவரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல் விருது” உருவாக்கப்பட்டுள்ளது. “தமிழ்ச்செம்மல் விருது” பெறுபவருக்கு ரூ.25,000 பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும். இவ்விருது, மாவட்டத்திற்கு ஒருவர் என 32 தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும்.
 • ஆண்டுதோறும் 200 இளந்தலைமுறையினருக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் பயிற்சி மற்றும் பல்வேறு இலக்கியப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் ‘இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’ எனும் திட்டம் உருவாக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு ரூ.20 இலட்சம் செலவில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இப்பட்டறையின் மூலம் 500 பேர் பயனடைந்துள்ளனர்.
 • தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுள்ள ஆட்சித் தமிழ் நூலின் அடிப்படையில் ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழிச் சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பணியாளர்களுக்கு ரூ.9.30 இலட்சம் செலவில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 • ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மாவட்டந்தோறும் நடத்திட தற்போதுள்ள ரூ.5,000/- செலவினத் தொகை ரூ.20,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
 • அரிய தமிழ் நூல்களை மின்எண்மத்தில் பதிவு செய்து நூலாக வெளியிடும் திட்டத்தின்கீழ் 10 நூல்கள் மின்எண்மப்படுத்தப்பட்டு நூலாக அச்சிடப்பட்டுள்ளன.
 • வெளிநாட்டு அறிஞர்களால் எழுதப்பட்ட தமிழ்மொழியின் வரலாறு மற்றும் சிறப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
 • சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறநெறிக் கருத்துகள் தொகுக்கப்பட்டு `அறநெறிக் கருவூலம்’ எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
 • தமிழ்மொழியின் பெருமையைப் பறைசாற்றும் சங்ககாலம் முதல் இக்காலம் வரை தமிழ் மொழியில் உள்ள புகழ் வாய்ந்த பொன்மொழிகளை இலக்கியம் வாரியாகத் தொகுத்து பொன்மொழிக் களஞ்சியம் எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
 • தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கணினிவழித் தமிழ் வளர்ச்சித் திட்டத்தில் செயல்பட, தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு ரூ.12 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
 • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • சென்னை எழும்பூரில் உள்ள ஆல்சு சாலைக்குத் ‘தமிழ்ச் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 • தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணியிடங்கள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பணியிடங்களாக நிலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
 • தமிழறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் இருநூற்றாண்டு நிறைவு ஆண்டை அரசு விழாவாகக் கொண்டாடும் வகையில் 07.05.2014 அன்று சென்னையிலும் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியிலும் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்படுகிறது.
 • தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
 • எல்லைக் காவலர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் அவர்தம் மரபுரிமையர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.15 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
 • நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களில் 1,470 நூல்கள் தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 • புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1981இல் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் பொலிவூட்டம் பெற்ற மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • ரூ.25 கோடி செலவில் உலகத் தமிழ்ச் சங்க நிருவாகக் கட்டடமும் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
 • பண்டைத் தமிழரின் பெருமைகளையும் சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் கண்டு பெருமைகொள்ளும் வகையில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் மதுரையில் சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
 • அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், தமிழ் கற்பதில் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகளைக் களைய உலகத் தமிழ் சங்கம் வாயிலாக சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
 • மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தவுள்ள `உலகத் திருக்குறள் மாநாட்டில்’ உலகளாவிய அறிஞர்களும் ஆய்வு வல்லுநர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

#
 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குத் தொகுப்பு நல்கை, ஓய்வூதிய நல்கை, பிற திட்டங்களுக்கான நல்கை என மொத்தம் ரூ.6.08 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
 • உலகத் தமிழ் அறிஞர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 • ரூ.50 இலட்சம் வைப்புத் தொகை வழங்கப்பட்டு தொல்காப்பியர் ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது.
 • பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் எடுத்துக் காட்டும் வகையில், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்க ரூ.3.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்குத் தொகுப்பு நல்கை, பிற திட்டப் பணிகளுக்காக மொத்தம் ரூ.30.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 • புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பெருகி வரும் மாணவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டும், கட்டட வசதிகளின் தேவையைக் கருத்திற் கொண்டும், இரண்டு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • தமிழாய்வுப் பணிகளுக்கென ஆசியவியல் நிறுவனத்திற்கு ரூ.42.73 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
 • திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு 3 பணியிடங்களுக்கு நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.15 இலட்சம் வழங்கப்படுகிறது.
 • தில்லித் தமிழ் சங்கத்திற்குத் தோரண வாயில் கட்ட நிதியுதவியாக ரூ.25 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
 • குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக ரூ.6.54 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
 • திருவனந்தபுரம், பன்னாட்டு திராவிட மொழியியற் பள்ளிக்கு ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
Share on: