போக்குவரத்துத் துறை : சொகுசான பேருந்துகள் – சொக்கவைக்கும் பயணங்கள்

(English) AIADMK- All India Anna Dravida Munnetra Kazhagam party Jayalalitha

 

#
  • சென்னையில் மோனோ இரயில் திட்டத்தை ரூ.8,500 கோடி செலவில் முதற்கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 43.48 கி.மீ. தூரத்திற்கு DBFOT முறையில் செயல்படுத்திட அரசு அனுமதி.
  • ரூ.236.63 கோடி செலவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளி மூலம் 25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திர நிலையம்.
  • நான்காண்டுகளில் 7,153 புதிய பேருந்துகள் ரூ.1,354.21 கோடியில் வாங்க ஆணை. இதுவரை 4,572 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
  • ரூ.48.79 கோடி செலவில் 713 பழையப் பேருந்துகள் புதுபிக்கப்பட்டு இயக்கம்.
  • வழித்தடப் பேருந்துகளின் எண்ணிக்கை, 19,167இல் இருந்து 20,684 ஆக உயர்வு.
  • 1,436 புதிய வழித்தடங்கள் தொடக்கம்.
  • மத்திய அரசின் டீசல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை மக்கள் மீது சுமத்தாமல் ஈடுசெய்ய போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு. மேலும், ரூ.578 கோடி நடைமுறை மூலதன செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடாக அதிகரித்துவரும் இயக்கச் செலவுகளை ஈடுகட்ட ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்க பத்து சிறப்பு வடிவமைப்பு பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகம்.
  • தொலைதூர வழித் தடங்களுக்கு மின்னணுப் பயணச்சீட்டு முன்பதிவு முறை அறிமுகம்.
  • ரூ. 31.66 கோடி அரசு செலவில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க மின்னணுப் பயணச்சீட்டுக் கருவிகள் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் அறிமுகம். முன்னோட்டமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் திருநெல்வேலி தவிர, மற்ற கழகங்களில் 13,627 கையடக்க மின்னணுப் பயனச்சீட்டுக் கருவிகள் வழங்கல். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில். 123 (On-Line) முன்பதிவு மையங்கள் தொடக்கம்.
  • நவம்பர் 2011 முதல் 37 பயணவழி உணவகங்கள் தரம் உயர்வு.
  • கூடுதல் வருவாயை ஈட்டும் பொருட்டு சிப்பஞ்சல் மற்றும் தூதஞ்சல் சேவை அறிமுகம்.
  • அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ஆண்டுதோறும் சராசரியாக 30 இலட்சம் மாணவ, மாணவியருக்குக் கட்டணமில்லாக் கையடக்க இலவசப் பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • “விருப்பம்போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு”முறை வேலூர், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாநகராட்சிகளிலும் ஜுன் 2012இல் அறிமுகம்.
  • 45 வயதிற்கு மேற்பட்ட 21,885 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை. 2013-2014இல், இத்திட்டம் 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 29,761 பணியாளர்கள் பயன்.
  • பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.28 கோடியில் புதிய சி.டி. நிழல் ஒளிக்கூறு இயந்திரம்.
  • விபத்தில்லாப் பணித் திட்டத்தின்கீழ், ரூ.9.94 கோடி மதிப்பில் விபத்தில்லாமல் பணி செய்த ஓட்டுநர்களுக்கு ஊக்கத் தொகை.
  • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பணியாளர் ஓய்வறையில் ரூ.17 இலட்சம் செலவில் 223 இரண்டு அடுக்குக் கட்டில்.
  • செப்டம்பர் 2010 முதல் அக்டோபர் 2013 வரை ஓய்வு பெற்ற 14,089 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.292.94 கோடி ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.
  • 47,649 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.45.77 கோடி அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் 4,908 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.24 கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • பண்டிகைக் கால முன்பணம் ரூ.2,000/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்வு.
  • 30,307 வாகன ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.
  • மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 569 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.
  • அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் 368 வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம்.
  • 2012-2013 அறிவிப்பின்படி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 9,157 பதிலி பணியாளர்களின் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.3.38 கோடி செலவில், பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள பணியாளர் ஓய்வறைகள் மேம்பாடு.
  • ரூ.18.60 கோடி செலவில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் கான்கிரீட் தளம் அமைப்பு.
  • போக்குவரத்துக் கழக மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி ஊதியத்துடன் சிறப்பு விடுப்பு அனுமதி.
  • சாலைப் போக்குவரத்து நிறுவன பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
#
  • சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் ஈரோடு பொறியியல் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பிரிவிலும், தானியங்கிப் பொறியியல் பிரிவிலும் தலா 30 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு.
  • விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய விபத்து இழப்பீட்டுத் தொகை திட்டம் மூலம் ரூ.80 கோடி நிதியுதவி.
  • 2012-2013-இல் நீதிமன்றப் பிணையில் இருந்த 219 பேருந்துகளை மீட்க ரூ.13.91 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சர்வதேசத் தரத்தில் ஓட்டுநர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பள்ளி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரூ.15 கோடி செலவில் அமைத்தல்.
  • கழிவு செய்யப்பட்ட பேருந்துகள் மின்னணு ஏல முறையில் ஏலமிடும் முறை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் அறிமுகம்.
  • 74 புதியப் பணிமனைகள் அமைக்க நடவடிக்கை. இதில் இதுவரை 9 பணிமனைகள் ரூ.7.57 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன.
  • தமிழகப் போக்குவரத்துக் கழகங்களின் 2011-2012ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டுத் திறனுக்காக மத்திய திட்டக்குழுப் பாராட்டு.
  • ஒரு லிட்டர் எரிபொருளுக்கு பேருந்துகள் செல்லக் கூடிய இயக்க தூரம் 5.25 கி.மீ. லிருந்து 5.30 கி.மீ. ஆக அதிகரிப்பு.
  • பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான குடிநீர் குறைந்த விலையில் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10/-க்கு வழங்கிடும் அம்மா குடிநீர் திட்டம். இதற்காக அம்மா குடிநீர் நிலையம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் கும்மிடிப்பூண்டியில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், ஒரு அம்மா குடிநீர் நிலையம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் கும்மிடிப்பூண்டியில் நிறுவப்படவுள்ளது.
  • சென்னையில் பயணம் செய்யும் பொது மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையங்களுடன் இணைப்பதற்கு 100 சிற்றுந்துகள் (Small buses) 40 வழித்தடங்களில் இயக்கம். மேலும் 100 சிறிய பேருந்துகள் 2014-2015இல் வாங்க ஆணை.
  • சென்னை மாநகர் மக்களின் கூடுதல் போக்குவரத்துத் தேவையினை நிறைவேற்றும் வகையில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 134லிருந்து 200 ஆக 2013-2014இல் உயர்வு. 2014-2015இல் 200-லிருந்து 250ஆக உயர்த்த ஆணை.
  • அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக ஸ்ரீரங்கம் – சென்னை தடத்தில் உணவு வசதியுடன் கூடிய இரண்டு பேருந்துகள் தொடக்கம்.
  • மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பிற பகுதிகளுக்கு விரைவாக எளிதில் சென்று திரும்பும் வகையில் 208 சிற்றுந்துகள் இயக்க அனுமதி.
  • அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நகரப் பேருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு சலுகை கட்டணத்துடன் கூடிய பயணச்சீட்டு வழங்கும் முறை புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் விரிவாக்கம்.
  • தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள் நீங்கலாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்சம் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் குழுமப் பயணிகளுக்கு பயணத்தொகையில் பத்து சதவிகித தள்ளுபடி.
  • ரூ.3.55 கோடி செலவில் சென்னை மாநகரப் பேருந்துகளில் கையடக்க பயண அட்டையை அமல்படுத்த அனுமதி.
  • கரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் ஊட்டியில் போக்குவரத்துக் கழக புதிய மண்டலங்கள் தொடக்கம்.
  • அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்கும் திட்டம் தொடக்கம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளன்று ஒரே நாளில், 53,129 தொழிலாளர்கள் இரத்ததானம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர்.
  • அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலியில் தலைமையகம் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு அலுவலகம் இயங்கி வருகிறது.
  • குரோம்பேட்டை, பொள்ளாச்சி, கரூர் ஆகிய இடங்களில் கூடுதல் பேருந்து கூண்டு கட்டும் பிரிவு அமைத்திட அனுமதி. அதில், குரோம்பேட்டை மற்றும் பொள்ளாச்சி கூண்டுகட்டும் பிரிவு இயங்கி வருகிறது.
  • 13 மாவட்ட தலைநகரங்களில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அமைத்திட அனுமதி.
  • 2014-2015இல் தண்டையார்பேட்டை அயனாவரம், புதுக்கோட்டை பிரிவு மற்றும் உருளிப்பட்டை புதுப்பிக்கும் பிரிவும், ரூ.3 கோடியில் விரிவாக்கம்.
  • 2014-2015இல் பணியிலிருக்கும், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு ரூ.25 இலட்சம் செலவில், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சித் திட்டம்.
  • பணியிலிருக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு குடும்ப இலவசப் பயண சலுகை 4,500 கி.மீட்டரிலிருந்து 5,500 கி.மீட்டராக உயர்வு.
  • போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 200 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், பணிமனை மற்றும் தொழிற்கூடங்களில் ரூ.3 கோடி செலவில் அமலாக்கம்.
  • போக்குவரத்துத் தொழிலாளர்களின் மகள் மற்றும் மகன் திருமண உதவித் தொகையாக முறையே, ரூ.30,000/- லிருந்து ரூ.50,000/- மாகவும், ரூ.20,000/- லிருந்து ரூ.50,000/- மாகவும் உயர்வு.
  • போக்குவரத்து தொழிலாளர்களின் ஈமச்சடங்கு செலவுத் தொகை ரூ.2,000/- லிருந்து ரூ.3,000/- ஆக உயர்வு.
  • நீதிமன்ற பிணையிலுள்ள 544 பேருந்துகளை மீட்க, ரூ.39.73 கோடி வழிவகை முன்பணமாக 2014-2015இல் அனுமதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • 2015-இல் அறிவிக்கப்பட்டதிற்கிணங்க 2012-2014ஆம் ஆண்டில், ஏழு போக்குவரத்துக் கழகங்கள் பல்வேறு செயல்திறன்களுக்காக, 12 விருதுகளை அனைத்து மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பிலிருந்து (ASRTU) பெற்றுள்ளன.
Share on: