
நக்கீரன் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார்.எடப்பாடி பழனிசாமி 2024 தேர்தலில் அதிமுக மெகா கூட்டணியை அமைக்கும் என்பதன் உட்பொருள்?
பாஜகவுடனான மெகா கூட்டணியை தான் எடப்பாடி பழனிசாமி தலைமை அமைக்கும். பாஜக அல்லாது தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் பாஜக அரசு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடும்.இரட்டை சின்னத்திற்காக ஓட்டு போடும் மக்கள் உண்டு.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும்.அதிமுக பிளவுபடவில்லை எடப்பாடி பழனிசாமி:அதிமுக ,ஒற்றுமையாக செயல்படாத காரணத்தினால் தான் சட்டமன்ற…