தமிழக திமுக ஸ்டாலின் அரசின் ஜனநாயக படுகொலை…!


இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ED ,மற்றும் IT அமலாக்கத்துறை , வருவாய்த்துறையைஇந்திய இறையாண்மையை காலில் தூக்கி போட்டு மிதிக்கும் திமுக மு.க.ஸ்டாலின் அரசாங்கத்தை , சட்டசபையை முடக்க வேண்டும். இவர்களின் வன்முறை வெளியாட்டம் ஆரம்பமாகிவிட்டது . இன்றைய தொலைக்காட்சிகளின் விவாதங்களில் திமுக அதன் கூஜாக்களின் வன்முறை தரமற்ற பேச்சுக்கள் எதிர்கட்சி பேச்சாளர்கள் , திமுகவை விமரிச்சித்த பேச்சாளர்களை பேசவிடாமல் செய்ததை, அதை வேடிக்கை பார்த்து அனுமதித்து ஆதரவு பேச்சு பேசிய நியூஸ் 18 நெறியாளர் , நாலாந்தார சன் நியூஸ் போன்ற சானல்களின் கூலிகள் செயலே சாட்சி. இதற்கு மேல் மத்திய அரசு , உச்சநீதிமன்றம் விட்டால் திமுகவை ஆதரிப்பவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் இருக்க முடியும் என்ற நிலை உருவாகி விடும். உள்ளங்கை நெல்லிக்கனியாய் டாஸ்மாக் கொள்ளை : ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடிப்பது தமிழகமே அறிந்து விட்டது .

அவர்களின் முன்னாள்நிதி அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார் .இந்த கருணாநிதி குடும்பத்து ஆட்சி வரலாறு , தமிழகத்துக்கு 1974-ல் காவிரி நதிநீர் தாரைவார்த்தது, கச்சதீவை தாரைவார்த்தது . இந்தியாவிலேயே ஒரு முதல்அமைச்சர் மீது ஊழல் சர்க்காரியா கமிஷன் அமைத்தது கருணாநிதி அண்டுகோவினர் மீதுதான் . சர்க்கரையை டன் கணக்கில் எறும்பு தின்றுவிட்டது ,கோதுமை காற்றில் அடித்து சென்றுவிட்டது , அரிசி பஞ்சத்தை உருவாக்கியது , பூச்சிமருந்து ஊழல் செய்தது ,மஸ்டர் ரோல் ஊழல் , வீராணம் காண்ட்ரா கட் ஊழல் , கூவம் மணக்கும் ஊழல் , நில அபகரிப்பு , 2 ஜி ஸ்பக்ட்ரம் என்று எண்ணிலடங்கா ஊழல் செய்தது ,7 ஊழல் நிருபணமானது கயவன் கருணாநிதி ஆட்சியில் .நமது தொப்புள்கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் தமிழர்களை காப்பாற்றுகிறேன் எல்லோரும் பதுங்குகுழிகளில் இருந்து வெளியே வாருங்கள் என்று நம்பி வெளியே வந்த மக்களை கொத்து குண்டு போட்டு கொல்ல துணைபோன எமன் கருணாநிதி இப்படி தமிழகத்துக்கு இனத்துரோகம் செய்த இந்த கும்பலை கேரளாவிலோ ,. ஆந்திராவிலோ , கர்நாடகாவிலோ , இந்தியாவின் இன்னபிற மாநிலங்களில் இப்படிப்பட்டவர்களை, கொலை கொள்ளைகார குடும்பம் , கட்சி இன்று ஆண்டு கொண்டிருக்குமா வெட்ககேடானது, அண்ணாவுக்கு பின் புரட்சித் தலைவர் என்ற புனித தலைவன் இந்த குடும்பத்தை ஒழித்து கட்டி மக்கள் காலடியில் போட்டார். என்றும் வெல்லும் வாக்கையும் , வாய்மையும் கொடுத்து தான் மறைந்தார் .

ஒரு வீடியோ விற்ற திமுக குடும்ப கும்பலால் , வெகுஜன மக்கள் இயக்கத்தை சீரழித்து , தான் என்ற அகங்காரம் கொண்ட ஒருவரால் , அந்த வீடியோ கேசட் கும்பல் ஊழலை வியாபாரமாக மாற்றி, திமுகவை வளரவிட்டு இன்று மக்கள் வரிப்பணம் கொள்ளை வியாபாரமாக மாற்றியதால் தான் தமிழகத்திற்கு , தலைகுனிவு , அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . திமுககாரன் அவன் தலைவன் வழியில் கொலை ,கொள்ளை என்ற நிலையில் இருக்கிறான், ஆனால் அஇஅதிமுக என்ற வெகுஜன மக்கள் சேவை பேரியக்கத்தின் தொடர் வெற்றி மக்கள் சேவையை தோல்வியுற வைத்த ஆணவத்தால் ஆடியவரும் , வீடியோ கேசட் கொள்ளை கும்பலும்தான் தமிழகம் ஊழல் மாநிலமாக மாறிவிட்டது இனியாவது இருப்பவர்கள் மக்கள் சேவை புரிந்து , புனித தலைவனின் புகழை காப்பாற்றுங்கள்.
Share on:

தற்போதிய அரசியல் திராவிடம் vs இந்துத்துவா என்று அமைக்கப்படுகிறது!


அதிமுக ஆட்சி காலத்தில் 2015ல் நடந்ததற்கு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது, இதே போன்று வேலுமணி,தங்கமணி , ஓ பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி,சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இவர்கள் மீது ஏன் வருமான வரித்துறை,அமலாக்கத்துறை,CBI -யும் நடவடிக்கை எடுக்கவில்லை .

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு பிறகும் கூட வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்? ஊழலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பா?

தற்போதிய அரசியல் திராவிடம் vs இந்துத்துவா என்று அமைக்கப்படுகிறது ஆனால் சித்தாந்த அரசியல் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு ஊழல்வாதிகளா ஊழல் செய்யத்தவர்களா என்று பார்த்து எந்த கட்சியாக இருந்தாலும் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படவேண்டும்.
Share on:

முன்னாள் சிறப்பு DGP. திரு.ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை மிக குறைவு!


முன்னாள் சிறப்பு DGP. திரு.ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை அவர் செய்த தவறை கணக்கில் எடுக்கும்பொழுது மிக குறைவு.ஒரு SP அளவு அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடமே இவ்வளவு அத்துமீறல் என்றால் அதற்கு கீழ் நிலையில் உள்ள DSP, Inspector, Sub Inspector நிலை என்ன?

அதனால் தமிழ்நாடு அரசாங்கம் மேல் முறையீடு செய்து அவருக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தரவேண்டும். #HigherPunishment #JusticeMatters @CMOTamilnadu
Share on:

“அதிமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகாருக்கு ஆதாரம் தருகிறோம் “Raid” நடத்த தயாரா”

“அதிமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகாருக்கு ஆதாரம் தருகிறோம் “Raid” நடத்த தயாரா” என்று கூறும் முதல்வர் அந்த ஆதாரங்கள் அடிப்படையில் நீங்கள் ஏன் இன்று வரை கைது செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் உங்களுக்குள் என்ன புரிந்துணர்வு இருந்தது.
,br>
வேலுமணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க அனுமதித்தும் இது வரை நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?

Share on:

Continue Reading

பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு தேர்தல் களத்தை பாஜக vs திமுக என்று அமைத்து அதிமுகவை புறந்தள்ள நினைக்கிறார்கள்!


பாஜகவுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று 2018-லேயே கே சி பழனிசாமி எச்சரித்தும் அதை உணராமல் மாறாக அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு இப்பொழுது பாஜகவின் சுயரூபம் தெரிந்ததும் வருத்தப்படுகிறீர்கள்.

பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு தேர்தல் களத்தை பாஜக vs திமுக என்று அமைத்து அதிமுகவை புறந்தள்ள நினைக்கிறார்கள். அதனால் இப்பொழுதே விழித்திருங்கள்.

“விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்” “உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டைவிட்டார்”
என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை புரிந்து நடந்துகொள்ளுங்கள்.
Share on:

அண்ணாமலையின் இந்த கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது!


சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது குடும்பம் மட்டும் தான் குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அம்மா குறித்து உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பும் அளிக்கவில்லை.

உண்மையிலேயே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்திருக்கிறாரா? இந்த விவரங்கள் அவருக்கு தெரியாததா? அல்லது எடப்பாடியை அவமானப்படுத்துவதாக நினைத்து அதிமுகவையும், அம்மாவையும் அவமானப்படுத்துகிறாரா அண்ணாமலை? அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
Share on:

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?

முதல்வர்: நிச்சயமாக நல்ல கோரிக்கை இது. பழைய பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைக்கலாமா? அல்லது புதிய பல்கலைகழகத்திற்கு வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதென்ன சாதாரண விஷயமா மெட்ராஸ் யூனிவர்சிடி என்பதை சென்னை பல்கலைகழகம் என்று மாற்றுவதிலேயே சிக்கல் உள்ளது. காரணம் பட்டமளிப்பு சான்றிதழ்களில் வீண் குழப்பம் வரும் பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் என்றால் கூடுதல் குழப்பம் சிக்கல் வரும்.

Share on:

Continue Reading

அடிப்படை தொண்டர்களுக்கு மட்டுமே தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அடித்து கூறும் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி!



✍️தீய சக்தி தி,மு,க, என வெளியேறி மாற்றாக மக்கள் பணியில் சிறு சிறு தொண்டாற்றி பாரத ரத்னா அவர்கள் தலைவர் பொருப்பை ஏற்றுக்கொள்ள வில்லை தொண்டர்கள், ரசிகர்கள்,பாமர ஏழை மக்கள், மீனவர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள் அவரை விரும்பி தலைவராக ஏற்றுக்கொண்டு அ,இ,அ,தி,மு,க கழகத்தை தோற்றுவித்தார்!

✍️தலைவர் பதவிக்கு கழகத்தில் சிறு சிறு சில சலப்புகள் எம்ஜிஆர் காதில் சென்றடையவே உடனடியாக அன்றைய மூத்த முன்னோடிகளான அரங்கநாயகம் மற்றும் ஆர்எம்வி,கேசி பழனிச்சாமி,நெடுஞ்செழியன், அன்வர் ராஜா,மற்றும் பலர் முன்னிலையில் ஒரு தீர்மானத்தை பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் நிறைவேற்றினார்.

✍️ அதுதான் தொண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தொண்டர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்க முடியும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

✍️தீர்மானம் பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் பைலாவில் எழுதப்பட்டது இதை புரட்சித்தலைவி அம்மாவும் பின்பற்றினார்!
Share on:

கவர்னர் மற்றும் திமுக மோதல் தமிழகத்தில் திராவிடம் vs ஹிந்துத்துவா என்ற கட்டமைப்பு!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து ,கவர்னர் மற்றும் திமுக மோதல் தமிழகத்தில் திராவிடம் vs ஹிந்துத்துவா என்ற கட்டமைப்பு என்று நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நடந்துகொண்டு இருக்கும் இந்த சூழலில்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் நடந்த கள்ளச்சாராய விவகாரம் பற்றி இந்த மாதம் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி அதிமுக தலைமைக்கு தகுதியானவரா?
Share on:

ஏன் இந்திய அரசாங்கம் இதனை செய்ய தவறியது?

IRCTC மற்றும் இந்திய அரசாங்கம், செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருக்கும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் 35 பைசா கட்டணம் காப்பீட்டுக் கட்டணம் வசூலித்ததற்காண காப்பீட்டுத் தொகையை வழங்க முடியும்.

IRCTC சில ஆண்டுகளுக்கு முன்பு தனது போர்ட்டலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கத் தொடங்கியது. தொடக்கத்தில் ரூ.0.98 பைசாவாக இருந்த பிரிமியம் தற்போது ரூ.0.35 பைசாவாக குறைந்துள்ளது.

இதன் மூலம் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்சில் விபத்திற்குள்ளானவர்கள் அனைவர்க்கும் அந்த காப்பீட்டு தொகை சென்றடைவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்
Share on: