எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா?-முன்னாள் அ.தி.மு.க எம்.பி கே.சி.பழனிசாமி கேள்வி

.தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவியாக இருந்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு கேள்விகளை எழுப்பியுள்ளது. ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே இனி செல்லும்’ என எடப்பாடியும் பன்னீரும் இணைந்து செய்த சட்டத்திருத்தத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப் பட்டார் சசிகலா. அதை எதிர்த்து, மெரினா தியானப்புரட்சிக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வுக்கு உயிர்நாடியாக இருந்த இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி அணி, பன்னீர் அணி இடையே ஒற்றுமை ஏற்பட்டதும், இருதரப்பும் இணைந்து பொதுக்குழுவை நடத்தினர். அதில், கட்சியின் விதியில் மாற்றம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளைக் கொண்டுவந்தனர்….

Share on:

Continue Reading

பா.ஜ.க. சொல்வதை தேர்தல் ஆணையம் செய்கிறது! -குற்றம்சாட்டும் முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி.!

அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அதே நேரத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.ஸுக்கு புதுக்குடைச்சல் தர தயாராகிறார் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி.

எம்.ஜி.ஆர்., ஜெ. உள்ளிட்டோர் வகித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியையே ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு அதிகாரமிக்க பதவிகளை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். சட்டத் திருத்தம் செய்தனர். இதனை நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு தற்போது அங்கீகரித்துள்ளது ஆணையம்.

இதனை எதிர்க்கும் கே.சி.பழனிச்சாமி நம்மிடம், “”அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்.! அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் சட்ட விதிகளின்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கட்சியின் தலைமையை யாரும் பின்வாசல் வழியாக ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காகவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கினர்.

பொதுவாக, சொத்துகளுக்காக உயில் எழுதுவார்கள்….

Share on:

Continue Reading

“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்!- கே.சி.பி கில்லாடி ப்ளான்”

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஆவதற்கான முஸ்தீபுகளில் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி இறங்கியிருப்பதால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பும் தினகரன் தரப்பும் ‘ஜெர்க்’ ஆகியுள்ளன.

தினகரன்- திவாகரன் மோதலால் குஷியில் இருந்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தரப்புக்கு கே.சி.பழனிசாமியின் ‘மூவ்’ அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே, மீண்டும் அவரைக் கட்சிக்குள் கொண்டுவந்து ஆஃப் செய்துவிட நினைக்கிறது ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பு. இன்னொருபுறம், கே.சி.பி-யைத் தங்கள் பக்கம் இழுத்து, எடப்பாடிக்கு செக் வைக்க நினைக்கிறது தினகரன் தரப்பு.

கே.சி.பி-யின் நெருங்கிய வட்டாரத் தில் பேசினோம். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுக்கும் என்று டி.வி விவாதம் ஒன்றில் கே.சி.பி பேசினார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் அதை மிகப்பெரிய குற்றமாகக் கருதினர். மோடிக்கு பயந்து, கே.சி.பி-யை கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தனர். ஆனால், அதனால் எழுந்த பிரச்னைகளை சமாளிக்கத்…

Share on:

Continue Reading